பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

45


4. உண்ணும் உணவு நேரங்களை சம நேரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது வேலை, ஓய்வு அல்லது பயிற்சி என்பதுடன் வயிறு காலியாகாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

5. வெறும் வயிற்றில் மருந்துகளை சாப்பிடக்கூடாது.

6. மதுபானம் குடித்தல், புகைத்தல், அடிக்கடி டீ காபி குடித்தல் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

7. அல்சர் உள்ளவர்கள் அதிக உடல் உழைப்பை தவிர்க்க வேண்டும் என்பதுடன், அதிகக் கவலைப்படும் விஷயங்களையும் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

8. வெற்றியானதுதான் மகிழ்ச்சி தரும் என்பதல்ல. வருகின்ற தோல்வியையும் ஏற்படுகின்ற மனதினைப் பெற்று வாழ்வது வயிற்றினை செம்மைப்படுத்துவது போலவே வாழ்வையும் மகிழ்ச்சி உடையதாக மாற்றிவிடும்.