பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




8. உதவாத ஊளைச்சதை

தசையும் சதையும்

தேவையான அளவுக்குத் தேகத்தில் தசைகள் இருந்தால், அவை தேகத்திற்கு அழகான தோற்றத்தையும், ஆண்மை மிகுந்த ஆற்றலையும், ஆரோக்கியமான வாழ்க்கையையும் அளிக்கும். வேண்டத் தகாத சதைகள், விரும்பத் தகாத நல்வினையும் வலிமையையும் கொடுத்துவிடும்.

தண்ணீர் குறைந்த, இறக்கம் நிறைந்த திசுக்களில் உருவான பகுதியை ‘தசை' (Muscle) என்கிறோம். கொழ கொழவென்று இறுக்கமற்ற தண்ணீர் நிறைந்த திசுப்பகுதியை நாம் 'சதை ' என்கிறோம். ஒருவருக்கு வேண்டியது தசைதான். சதை அல்ல.

ஊளைச் சதை :

உடலுக்குத் தேவையில்லாமல் குவிந்து கிடக்கும் சதையைத்தான் ஊளைச் சதை என்கிறோம். ஊளைச் சதை உடலுக்கு நல்லதல்ல, சுகாதாரமானது மல்ல. அதையும் ஒரு வியாதி என்றுகூட கூறலாம். தேங்கிக் கிடக்கும் நீரால் உதவி இராது. உபத்திரவம்தான் ஏற்படும். தொங்கிக்கிடக்கும் ஊளைச் சதையால், தொந்தரவு தானே ஒழிய, தெம்பும் கிடையாது. தேற்றரவம் இல்லை. அது தனி மனிதனின் தணியாத வாழ்நாள் பிரச்சினைதான்.

எப்படி ஏற்படுகிறது?

ஊளைச் சதை எப்படி ஏற்படுகிறது? அது குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்கி விடுகிறது. இது