பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

47


பெற்றோர்களின் பேராசையால், பிடிவாதத்தால் பெருகி வரும் பேராபத்தாகும். தங்கள் குழந்தை 'கொழு கொழு' என்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு, கண்டதை யெல்லாம் உண்ணக் கொடுத்து விடுவது ஒரு முக்கிய காரணம். தின்னத் தொடங்குகிற குழந்தைக்கு அஜீரணத்தில் ஆரம்பித்து, உண்ணும் பழக்கத்தில் உற்சாகம் ஏற்பட கண்ட நேரத்தில் கண்டதை வயிற்றில் போடும் வேலைகளின் மிகுதி வயது ஆக ஆகக் குழந்தையைத் தொற்றிக் கொள்கின்றன. பெற்றோர்கள் கொழுகொழு குழந்தை ஆசையை இப்படி ஆரம்பித்து வைக்க, குழந்தைக்கோ வயது ஆக ஆக எடைப் பிரச்சனை ஆரம் பித்து ஊளைச்சதையில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. 15 வயதுக்குள்ளே இந்த நிலைமை ஆரம்பித்து, அது வாழ்நாள் முழுதும் வம்பாகவே வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதிகமான அளவிலே உண்பதால் ஊளைச் சதை உண்டாகிறது. அவை மாவுப் பொருள்; சர்க்கரை கொழுப்புப் பொருட்கள் இவற்றை அதிகம் உண்பதால் உண்டாகிறது.

ஊளைச்சதை என்பது பரம்பரை பரம்பரையாக வரும் என்பார்கள். அது உடலில் உள்ள சுரப்பிகளால் (Glands) தான் உண்டாகிறது என்பார்கள். வேண்டாத பழக்க வழக்கங்களால் வருகின்றன என்பார்கள். ஆனால் அவை யெல்லாம் காரணங்கள் அல்ல. எல்லாமே தவறான பழக்க வழக்கங்கள். உடற்பயிற்சி இல்லாமை, அதிக இயக்கம், இராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது,