பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வேலை செய்யாமல் வயிறு நிறைய உண்பது போன்ற காரணங்களால் தான் ஊளைச் சதை வந்து உடலை உறுத்திக் கொண்டு காட்சியளிக்கிறது.

ஊளைச் சதையால் உற்பத்தி

ஊளைச் சதையால் உற்பத்தியாகும் நோய்கள் நிறையவே உண்டு. உடலுக்கு உரிய எடை அளவுக்கு மேல் எடை கூடி விடுவதால் நடக்கவும் கூட பெருமூச்சு வாங்கும் பேரபாயம் ஏற்படுகிறது. அதனால் இரத்த ஓட்டம் பாதிப்பு கொள்கிறது.

அதனால் இரத்த அழுத்த நோய் ( Blood Pressure); இருதய நோய்கள் (Heart Disease); திடீர் மயக்கம் (Strokes): நீரிழிவு நோய் (Diabetes); மூட்டு வலிகள் (Arthritis); மற்றும், வயிற்று வேதனைகள் (Gallstones) போன்ற நோய்கள் சர்வ சாதாரணமாக விளைகின்றன.

ஒரு பரிசோதனை

அமெரிக்காவில் உள்ள கார்னர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மெக்லே என்பவர் உணவால்தான் இந்த ஊளைச் சதை உண்டாகிறது என்பதை நிரூபிக்க ஒரு பரிசோதனை நடத்தினார். சுண்டெலிகளைக் கொண்டு வந்து இரு பிரிவாகப் பிரித்துக் கொண்டார். ஒரு பிரிவு சுண்டெலிக்கு நிறைய தீனிகள் கொடுத்தார். இன்னொரு பிரிவுக்கு அளவான உணவை அளித்து வந்தார்.

கண்டதைத் தின்ற சுண்டெலிகள் நன்றாகக் கொழுத்து வெகுவிரைவில் செத்தொழிந்தன. கட்டுப் பாட்டுடன் அளவான உணவினை உண்ட சுண்டெலிகள் அவைகளைவிட, இரண்டு மடங்கு ஆயுட்காலம் வாழ்ந்தன; சுறுசுறுப்புடன் வாழ்ந்தன.