பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

49


இந்தப் பரிசோதனை மனிதர்களுக்கு ஒரு பாடமாகும். வாழ்க்கை என்பது உணவுக்காக, உண்டு மகிழ்வதற்காக மட்டுமல்ல, உடல் என்பது சோற்றுப்பை அல்ல; சுவையான உணவுகளைத் தாங்கும் சுமைதாங்கியு மல்ல என்பதை மனிதர்கள் உணர வேண்டும். உணவுக்கும் மேலே உண்மையான உயர்ந்த இலட்சியமும், உற்சாகமான, உழைப்பும் உண்டு என்பதை அவர்கள் நினைத்து உலகுக்குப் பயன்பட்டால், ஊளைச் சதை அவர்களை நெருங்குமா என்ன ?

உணவில் கட்டுப்பாடு

1. எந்த உணவாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. 2. அதிலும் மாவுச் சத்து நிறைந்த அரிசி, கோதுமை, ரொட்டி, உருளைக் கிழங்கு, போன்றவற்றை குறைவான அளவுதான் உட்கொள்ள வேண்டும். 3. காய்கறிகள் கீரை வகைகள் மிகவும் நல்ல உணவாகும். 4. கொழுப்புச் சத்துப் பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். 5. சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவது சிறந்ததாகும். 6. உப்பு குறைந்த உணவுப் பண்டம் நன்மை தரும். ஒரு குறிப்பை நீங்கள் கவனிக்க வேண்டும். அதிகமான ஊளைச் சதை உடல் கனத்தை மிகுதிப்படுத்துகிறது. அதிகக் கனம் இரத்த ஓட்டத்தை மிகுதிப் படுத்துகிறது. தடைபடும் இரத்த ஓட்டம்