பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காரணமாக, இருதயத்துக்கு அதிக உழைப்பும் வேதனையும் உண்டாக, இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அதிக உடல் எடையைத் தாங்க முடியாத எலும்புகளும். எலும்பு மூட்டுகளில் வலியும் வேதனையும் நிறைகின்றன. அத்துடன் நில்லாமல், ஹெர்னியா என்ற வியாதியும், அதைத் தொடர்ந்து நீரிழிவு நோயும் வருகின்றன என்பதை அறிந்து கொண்டால் போதும்.

ஊளைச் சதையும் மரணமும்

கீழ்க்காணும் பட்டியலைப் பாருங்கள் ஊளைச் சதை உள்ளவர்கள், மரணம் இந்த சதவிகிதத்தில் உண்டாகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் பட்டியல் போட்டுக் காண்பித்திருக்கின்றார்கள்.

உடலில் அதிக எடைதான் இதற்குக் காரணம் என்றால், ஒருவருக்கு உடல் எடை எப்படி இருக்க வேண்டும்? எவ்வளவு இருக்க வேண்டும்? அதை அறிந்து கொண்டு அந்த நிலையில் உடலை வைத்துக் கொண்டால், ஊளைச் சதையை ஒழிக்கலாம். உருவ அமைப்பிலும் கவர்ச்சியாகத் தோன்றலாம்! உடலும் அதற்குரிய எடையும் எவ்வளவு என்பதைக் காண்போம்.