பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - - - - * 14. முதுகு வலி நேர்த்தியான உடல் நிமிர்ந்து நிற்கின்ற, நிமிர்ந்து நடக்கின்ற நேர்த்திமை பெற்றிருப்பது மனித உடல்தான். இரண்டு கால்களால் எழிலாக நடைபோட்டு, இந்த உலகின் விந்தையை எடை போட்டுக் கட்டுப்படுத்தி, காரியங்களை ஆற்றுகின்ற சாமர்த்தியங்களைப் பெற்றிருப்பதும் மனித இனம்தான். ஆனால், இந்த இனிய நினைவை இழந்து விடும் மனிதக் கூட்டம், மீண்டும் மிருகங்கள் போல கூனிக் குனிந்து நடை போடுவதைப் பார்க்கும் போது. மனதுக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. நிமிர்ந்திருக்கும் முதுகினை, வளைத்துக் கவிந்து கொண்டு வாழ்க்கையை ஒட்டுவதால்தான், முதுகு கவிழ்ந்து போவதுடன் முதுகு வலியும் உண்டாகிறது. வலிக்கான காரணங்கள் நாகரிக காலத்தில் நாம் வாழ்கிறோம். மனதுக்கு அடிமையாகி, உடலுக்கு முதலாளியாகி வாழ்கிறோம். ஆசைப் படுகின்ற மனதுக்காக அறிவிழந்து அலை கிறோம். ஆசையுடன் பாடுபடும் உடலையோ அவமதித்து இழிவு படுத்துகிறோம். முடிவு! வலியும் வேதனையும் தான் நம் தலைவாசலில் வந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. உடலின் நலத்தைப் பற்றி நாம் முதுகைத் திருப்பிக் கொண்டு விடுவதால்தான் இந்த முதுகு வலி வருகிறது என்பதுதான் முக்கியமான கருத்தாகும்.