பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 83 - * முதுகு வலி ஏன் வருகிறது என்பதற்கு ஒரு புத்தகத்தில் 103 காரணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் ஆராய்ந்து அலசிப்பார்க்காமல், முக்கியமான ஒரு சில காரணங்களை மட்டும் காணலாம். முதுகின் உட்புறத்திலே காயம் அல்லது வெளியிலே காயம் முதுகு வலியைத் தரும் என்பது சாதாரணமாக அனைவரும் அறிந்ததே! சிலருக்குக் கடுமையானதும்மல் ஏற்படும் பொழுது, முதுகு வலியை ஏற்படுத்தி விடுகின்றது. சிலருக்கு இருமல் உண்டாகின்ற நேரத்தில் வலி வரலாம். இந்த இரண்டு செயல்களுமே முதுகின் அடிப்புறப் பகுதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதால் இந்த வலி வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இந்த இருமலும், தும் மலும் ஏற்படுத்துகின்ற அதிர்ச்சியை முதுகுத் தண்டின் அடிப்புறப் பகுதியை இடம் மாற்றி விடுவது போல ஆட்டி வைக்கிறது என்பதுதான் அதன் ரகசியமாகும். * ஆனால், ஏன் இந்த இருமல், தும்மல் இப்படி வலியை உண்டாக்குகிறது என்று கேட்டால், மருத்து வர்கள் கையை விரித்து விடுகின்றனர். அடுத்ததாக, முதுகெலும்பினை உருவாக்கியிருக்கும் முள்ளந்தண்டின் 33 அடுக்குகளைக் கட்டியிருக்கும் தசை நார்களும். ஒட்டியிருக்கும் தசைகளும் தவறான மருத்துவ முறைகளால் தாக்கப்படும் பொழுது எதிர்ப் புத் தெரிவிக்க இப்படி வலியை ஏற்படுத்துகிறது என்பார்கள்.