பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஓரிடத்திலே உட்கார்ந்து கொண்டே வேலைகளைக் கவனிப்பது அதற்குள்ளேயே ஏற்படுகின்ற பிரச்சினைகள் இருக்கித் தாக்கும் கவலைகள், ஏற்படுத்தும் மனக் குமுறல்கள் உணர்வு அதிர்ச்சிகள் இதனால் உணர்ச்சி வசப்பட்டு உலைந்து உழல்கின்ற மக்கள், ஒரே இடத்தில் அமர்ந்த காரணத்தால் நெகிழ்வுத் தன்மையை இழந்து விறைப்பாகிப் போனதால் விளையும் வேதனைகள். அதுபோலவே, காரிலே உட்கார்ந்து சுக சவாரி செய்கின்றவர்கள், நாலடி எடுத்து வைத்து நடப்பதற்கு நாணங் கொள்கின்றவர்கள். எல்லாவற்றிற்கும் ஏவலாளர் களையே எதிர் பார்த்து வாழ்கின்ற பணக்கார சோம்பேறிகளுக்கு இந்த வலி அடிக்கடி பாயும், படை யெடுக்கும், பயமுறுத்தும், பலவீனப்படுத்தும். ஒரே மாதிரியாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப் போருக்கு முதுகு வலி நிச்சயம் தோன்றும், தொடரும். சிலர் நன்றாகச் சாப்பிட்டு, தேகம் கொழுத்துக் குண்டாகி விடுவார்கள். அதாவது தேவையான உடல் எடைக்கு மேலே தேக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். நோயுற்ற முதுகுத் தசைப் பகுதிகள் மற்றும் அதிக எடை, மூட்டு வாதம், முடக்கு வாதம் போன்றவைகளும் முதுகு வலியை உண்டாக்கி விடுகின்றன. அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது, எதிர் பார்ப்பது, ஏமாற்றமடைவது, சோர்ந்து போவது போன்ற செயல்கள் தான் முதுகு வலியை உண்டாக்கும் மூல காரணங்கள் என்றும் பலர் கூறுகின்றார்கள்.