பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 85 எப்படி தீர்ப்பது ? முதுகுவலியை எப்படிப் போக்குவது? வந்தபடியே போகட்டும் என்று முனகிக் கொண்டிருந்தால் போதுமா? போய்விடுமா? உடற்பயிற்சி செய்தால் போதும். வலி ஒடி மறைந்து விடும். வேலையற்று வெறுமனே இருக்கின்ற தசைகள், விறைப்பாகி நிற்பதுதான் வலிக்குக் காரணம் என்பதால், அவற்றை இதமாக இயக்கி விட்டால், தசைப்பகுதிக்குள் தாரளமாக இரத்த ஒட்டம் புகுந்து, தளர்ச்சியை நீக்கி எழுச்சியை உண்டாக்கி விடுகிறது. தசைகளை உருவாக்கும், செழுமைப்படுத்தும் உடற்பயிற்சிகளாக அறிந்து செய்தால், நிச்சயம் இந்த வலி போய்விடும். ஒரு நாள் மட்டும் செய்தால் போதுமா என்றால், அல்ல. அல்ல...உணவு உண்ணுவது போல, பயிற்சிகளும் தொடர வேண்டும். பழக்கப்படுத்திக் கொண்டு, தசைகளைப் பலப்படுத்தி விட வேண்டும். முதுகுத் தண்டின் அமைப்பு: பயிற்சிக்கு முன், ஒரு பால பாடத்தை நாம் அறிந்து கொள்வோம். மனித உடலை நிமிர்ந்து நிற்கச் செய்கின்ற பெருமையுடன் விளங்குவது முள்ளந்தண்டுதான். தலையின் அடிப் பகுதியில் இருந்து ஆரம்பித்து, இடுப்பின் மேற்பகுதி வரை நீண்டு வந்திருக்கும் இந்தத் தண்டு, 33 துண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த 33துண்டுகளும் ஒன்றின் மேல் ஒன்றாக, ஒழுங்காக உட்கார்ந்திருந்த வண்ணம் இயங்குகின்றன.