பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா e இந்த அமைப்பு உடலுக்கு சமநிலையைக் கொடுப்பதுடன், உடலின் எடையும் தாங்கிக் கொள்கின்ற சிறப்புடன் அமைக்கப் பெற்றிருக்கிறது. செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக சீராக அடுக்கப்பட்டிருக்கும் சிங்காரத் தோற்றத்துடன் அமையப் பெற்றிருக்கும் இப்பகுதி, வலிமையான பகுதியாகும். நாம் முன்புறம் குனிந்தாலும், பக்கவாட்டில் பின்புறத்தில் வளைந்து பார்த்தாலும், எல்லாத் துண்டு களும் ஒன்றுக் கொன்று பக்கபலமாக இருந்து பணியாற்று கின்றன. இதன் எடுப்பான இதமான பணிகளுக்காக அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்கின்ற வண்ணம் துண்டுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துண்டுகள் தசை நார்களால் வளைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த இணைப்புகளுக் கிடையே 88 சதவீதம் நீர்த்தன்மை நிறையப் பெற்றிருக்கும். இது இளமைக் காலத்தின் நியதி. வயதாகும் பொழுது 70 சதவிகிதமாகக் குறைந்து போகிறது. இதனால் வழவழப்புத் தன்மை குறைவதை நாம் அறிகிறோம். இப்பொழுதுதான் சீராக முள்ளந்தண்டு இயங்கிட நாம் பயிற்சி செய்து பதப்படுத்தி வந்தால், இயற்கையான இயக்கங்கள் இதமாக நடைபெறும். 33 துண்டுகளும் முறைப் படி கவனத்துடன் பாதுகாக்கப் பயிற்சிகள்தான் அவசியம். இல்லையேல் அவை பாதிக்கப்படுகின்றன. இதற்கு ஒரு கணக்கினையும் காட்டுவார்கள்.