பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 87 அதிகமான முதுகுவலிக்காரர்கள் முதுகுத் தண்டின் அடிப் பகுதி வலிக்கு ஆளாகின்றவர்கள்தான் அவர்களுக்கு, அந்தப் பக்கத்துத் தசைகள், தசைநார்கள், பாதிக்கப் பட்டிருப்பதால், ஏற்பட்ட வேதனைகள்தான். முதுகு வலியை முறியடிக்க முதுகு வலியை முறியடிக்க மூன்று முறைகளைக் கூறுவார்கள். பதமான பயிற்சிகளை செய்து கொண்டு வருவது ஒன்று. உலைச்சல் மனமில்லாமல், ஒய்வு எடுப்பது. அதாவது படுக்கையில் படுத்தே கிடப்பது அல்ல. அது அதிகமான வலியை உண்டாக்கிவிடும். கஷ்டமில்லாத வேலை. கண் காணிப்பான பயிற்சி. கட்டுப்பாடான ஒய்வு இது இரண்டாவது முறை. மூன்றாம் முறை தேவையானால் மருத்துவர்கள் விருப்பப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்வது. சில மருத்துவர்கள் இதமான வெந்நீர்க் குளியல் இனிய பயன்களைத் தரும் என்கிறார்கள். சிலர் ஐஸ் ஒத்தடம் நன்கு பயன் தரும் என்கிறார்கள். உடல் என்பது உழைப்பதற்காகத் தோன்றியது என்ற எண்ணத்தால் நம்பிக்கை வைத்து உழைப்பில் மகிழ் பவார்கள், என்றும் எந்த வலிக்கும் ஆளாகாது இன்பமாக வாழ்வார்கள். இந்த நம்பிக்கையாலும், இனிய உழைப்பாலும் வாழ முயல்வோம் என்று இன்றே உறுதி செய்வோம். சிறப்போம்.