பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - o 15. உடல் நலம் பேணும் உடற் பயிற்சிகள் இந்த உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது மனித உடல்தான். இது சிக்கனமான, செலவில்லாத, வரியேயில்லாத உற்பத்தி என்று பலர் பேசக் கேட்கும் பொழுது, வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவல்ல உண்மை. மனித தேகம் மாபெரும் சக்தி படைத்ததாகும். வரம் பெற்று வந்த தெய்வப்பிறவி. கிடைக்கப் பெறாத அருள் மணி என்றெல்லாம் அறிவுலக மேதைகள் உடலைப் பற்றிக் கூறுவார்கள். அதனால்தான் ஒளவையும் அரிதரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்று பாடினாள். ஐந்தறிவு ஜீவன்கள் எவ்வளவுதான் வலிமையுடை யனவாக இருந்தாலும், ஆறாவது அறிவுடைய மனிதர்களிடம் அகப்பட்டுக் கொள்கின்றன. அடிமைப் பட்டு வாழ்கின்றன. மனிதர்களிடமுள்ள மகா சக்தி வாய்ந்த ஆறறிவு மேலும் மகத்தான சக்தியுடன் பெருக வேண்டுமானால், அதனைத் தாங்கிட வேண்டுமல்லவா? வளமான நஞ்சை நிலம்... வளமான பயிர்கள் விளைச்சல் அது போலவே, நலமான தேக நலம், அதிலே நடமாடும் ஆறாவது அறிவின் யூக பலம் ஒருவரை வாழ்க்கையில் முன்னேற்ற முதலாவது தேவை உடல் நலம். மற்றவையெல்லாம் இதன் பின்னேதான்.