பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15 ————————||||

உப்புமண்டித் தெரு


முகம் கைகால்களைக்
கழுவிப் பார்த்தும்
உஷ்ணத்தைத்
தணிக்க முடியாத
அய்யாக்காண்ணு
அடி பட்ட வேங்கையாக
வீட்டுக் குள்ளே
விரைந்து வந்தார்!


'கட்சி மாப்பிள்ளை',
'செயல் மறவர்’,
அப்போது தான்
தட்டிலிருந்து
சோற்றுக் கவளத்தை
உருண்டையாக்கி
வாய்க்குக் கொண்டு போக
வலது
கையை நகர்த்தினான்!


இடது கையில்
தேய் பிறைபோல அப்பளம்!
'டேய்!. உலகப்பா...!
உறுமினார் அய்யாக்கண்ணு!
போடுறா சோத்தைத்
தட்டிலேயே!
தொடாதே
அந்த சோத்த...!