பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||————————16

ஒன்னை
ஒதிய மரமா வளர்த்த
ஒன் ஆயா மீது ஆணையா
ஒரே தடவையிலே
சொல்லிடறேன்.
அந்த சோத்தை
இனிமே நீ
இங்கே தொடவே தொடாதே!

நான்
சேத்திலே நின்னுக்கிட்டு
இருந்தப் போ...!
என்ன சொன்னே நீ?
இந்த உலகப்பன் காலு
என்னைக்கும்
சேத்திலே படவே படாதுனு.
சொன்னில்லே...!

இப்ப
நான் சொல்றேன் கேட்டுக்க.
சேத்திலே கால வைக்கக் கூட
வெறுக்கிற
சோம்பேறிப் பயல்களுக்குச்
சோத்திலே மட்டும்
கை வைக்க
என்னடா உரிமை
இருக்கு?