பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23 ————————||||

உப்புமண்டித் தெரு


புன் சிரிப்பும்
புதிராக இருந்தன!
எரிச்சலாகவும் இருந்தன!

"ஏம்ப்பா இதைப்போய்
அவமானமா எடுத்துக்கிறே..?”
எங்கோ தொலை தூரத்தில் உள்ள
 இந்த தொடர்வண்டி சந்திப்பு
 கழிப்பறை படத்திலே
என்னையே உரிச்சு வச்சாப்பிலே
 எழுதி இருக்கான்னா...

'ஆண்' படம் போடறப்போ
என்னோடு உருவம்தான்
 அதை தீட்டின ஒவியனுக்கு
 வந்திருக்குன்னா என்ன அர்த்தம்...?

ஜனங்களிடத்தே அந்த அளவுக்கு
நான் நினைப்பிலே இருக்கேன்னுதானே-
என் புகழ் ஒளி பொங்கிகிட்டு
இருக்குன்னுதானே அப்ப அர்த்தம்.!
இதுதான் நெசமான புகழ்...!
இதுதான் கலையின் முகவரி!

தனிச்செயலர் புரிந்து கொண்டு
விட்டதாய்
தலையாட்டினார்!