பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

நமது வாழ்வின் இருப்பனைத்தும் தீர்ந்து வெறுமை ஆகிடும் அமைந்த ஊழின் காலடிக்கீழ் அளவில் நெஞ்சம் நொறுங்கிடும் இவணிருந்து சென்ற மக்கள் வாழ்விது என்றே இயம்பிட அமர நாட்டிருந்து மக்கள் எவரும் திரும்பவில்லையே.

குழந்தைப் பருவக் காலந் தன்னில் கூடுகின்றோம் குருவிடம் இழந்து பருவம் கூடும் காலம் எய்தும் அறிவால் இடறினோம், உழன்று போகும் வாழ்வின் போக்கு வகுத்தளிப்ப தொன்றுதான்் புனலைப் போல வந்திருந்தோம் காற்றைப் போலப் போகிறோம்.

ஆடிப் பாடிக் களித்திருந்த தோழர் தாமும் அகன்றனர், ஒடிக் காலன் ஒருவர் பின்னர் ஒருவராக மிதித்தனன் வேடிக்கையாய் மது அருந்தி ஒத்த காலத் திருந்தனம், நாடி முன்னே குடித்தவர்கள் நமக்கு முன்னே சென்றனர். விண்ணகத்தின் ஆழியே உன் கெட்ட மதியால் வீழ்கிறோம்! மண்ணகத்தில் அறம் அழித்தல் தொன்றுதொட்டுன் மறந்தொழில் புண்ணுற்றுள்ளம் பிளக்குமாயின் வருத்தம் வந்து பொங்கிடும்; எண்ணிலாத மதிப்புயர்ந்த மணிகள் உன்னுள் இருந்திடும்.

44 த. கோவேந்தன்