பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

குழந்தைகளுடன், முக்காடு கூடப் போடாத பெண்களும், குவிந்து கிடக்கும் பிணக் குவியல்களுக்குச் சவக்குழிதோண்டும் வேலையில் ஈடுபட்டிருப்பதையும் கண்டார்கள்.

பெருஞ்சாலை வழியாக உமாரும் பாதுகாப்புப் படை வீரர்களான காத்தாயனியர்களும் போகும்போது, எதிரிலே அடிமைகள் வரிசை வரிசையாகச் செல்வதைக் கவனித்தார்கள். துருக்கிய வீரர்களிடமிருந்து, அடிமை வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்பட்ட, இந்த ஜெருசலத்து அடிமைகள் டமாஸ்கஸ் பட்டணத்தில் லாபத்துடன் விற்கப்படுவதற்காக நடத்திச் செல்லப்பட்டார்கள். இந்த அடிமைகளைக் கண்டபோது, உமாருக்குக் கொரசான் போர்க்களமும் அங்கே தான் சந்திக்க நேர்ந்த அடிமைகளான யார்மார்க்கும், ஸோயி என்ற பெண்ணும் நினைவுக்கு வந்தார்கள்.

ஜெருசலத்தை நோக்கிச் சென்ற அவன், இரவு நெருங்கி வரவே, நகருக்கு வெளியில், மாலிக்ஷாவின் தளபதியான அமீர் அஜீஸின் கூடாரத்தில் தங்கினான். ஏனெனில் கூட வந்த பாதுகாப்புக் குழுத் தலைவன் இரவில் நகருக்குள் இருப்பது பாதுகாப்பானதல்ல என்று கூறிவிட்டான். மறுநாள் காலையில், ஜெருசலம் நகருக்குள் சென்று, இஸ்லாமியப் புனிதப் பள்ளிக்குச் சென்றான். அங்கு எந்தவிதமான போரும் நடக்கவில்லை. பட்டாளத்துடன் கூடவே வந்த முல்லாக்கள், பளிங்கினால் கட்டப்பட்ட இந்தப் பள்ளி வாசலுக்குள்ளே கூடியிருந்தார்கள். அகிஸா மசூதியையும் அவர்கள் உரிமைப் படுத்திக் கொண்டார்கள்.

வேதமோதும் மேடையிலிருந்தபடி பிரார்த்தனையை நடத்தி வைத்த இமாம் அவர்கள், பாக்தாது காலிப்பின் பெயராலும், சுல்தான் மாலிக்ஷாவின் பெயராலும் தொழுகையைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன் பிரார்த்தனையை நடத்தி வைத்த எகிப்தியர்கள் ஊரை விட்டே ஓடிவிட்டார்கள். கூட்டத்தின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக, உமார், பாறையினாலான வட்டக் கோபுரத்தின் உள்ளே நுழைந்து கொண்டான். அரை யிருட்டாக இருந்த அதன் உட்பகுதியில் அமைதி நிலவியது. அங்கே அவன் மண்டியிட்டு, அங்கிருந்த புனிதமான சாம்பல் நிறப்பாறையைத் தொட்டுக் கொண்டே தொழுகை நடத்தினான். மெக்காவில் உள்ள பள்ளியின் கருங்கல்லின் அளவு புனிதம்