பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

போட்டிருந்தான். யாஸ்மி அதில் சாய்ந்து கிடந்தாள். அருகிலே படுத்திருந்த உமார் அவளுடைய கூந்தலின் கற்றையின் டையே தன் விரல்களை நுழைத்து கோதிவிட்டான். நீண்ட நாளைக்குப் பிறகு இப்பொழுதுதான் அவனுக்கு மறுபடி உயிர் வந்தது போலிருந்தது. அன்றைய இரவு அழுத்தம் நிறைந்ததாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளின் துன்பப் பொழுதுகள் எல்லாம் தொலைந்து போய் விட்டன. கடலின் மேல் தோன்றிய தீய தோற்றம் கடலுக்குள்ளேயே மீண்டும் மறைந்தது. போல், அந்த நாட்கள் மறைந்து போய் விட்டன. விண்மீன் வெளிச்சத்தின் ஒளிப்பெருக்கு, அவனருகில் இருந்த யாஸ்மியின் சிவந்த கைகளைக் கோடிட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது.

அவள் மூச்சு விடும்போதெல்லாம் அவள் மேல் போர்வை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. வெளியிலே, மணல் வெளியில் முளைத்திருந்த பச்சைப் பூண்டுகளின் காய்ந்த வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து வந்து கொண்டிருந்தது.

“அன்பே, இனியும் தூங்காமல் இருக்கிறாயே” என்று உமார் யாஸ்மியைக் கேட்டான்.

“எனக்கு மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை. அது உடலைத் துன்புறுத்துகிறது. என் இன்பத்தின் அளவை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தவறானதா?” என்று யாஸ்மி சோகம் பொருந்திய புன்முறுவலுடன் கேட்டாள்.

“அது தவறாக இருந்தால், நான் பெரும் பாவியாக இருக்க வேண்டும்!” என்றான் உமார்.

யாஸ்மி தன் விரல்களால் உமார் உதடுகளை மூடினாள். “உஷ் அப்படிச் சொல்லாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது. உங்கள் அன்பை நினைத்து ஏங்கி ஏங்கி நட்சத்திரங்கள் தோன்றியதிலிருந்து மறையும் வரை காத்திருந்தும், பார்த்துக் கொண்டே நடந்துமாய் கழித்த இரவுகள் எத்தனையோ! இப்பொழுது நம் காதல் நிேைவறி விட்டது. இனி. இனிமேல், தங்களைப் பிரிந்திருப்பதென்பது என்றால் நினைக்கக் கூட முடியவில்லை. அப்படிப் பிரிந்து விட்டால் அதைப்போல் கொடுமையானது வேறில்லை. தங்களைப் பிரிந்து விடும்படி மீண்டும் எதுவும் நேரிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. மிகப் மிகப் பயமாக இருக்கிறது.”