பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197

“அந்த டிகிரிக் கோட்டில் நிசாப்பூர் கூடத்தான் இருக்கிறது இன்னும் அலெப்போ, பார்க் முதலிய எத்தனையோ பட்டணங்கள் இருக்கின்றன?” என்று மைமன் விளக்கினான்.

அவர்கள் தேடும் அந்த இடம், இந்தியாவில் இருக்க முடியாதென்றும் நிசாப்பூருக்கும் மேற்கேதான் இருக்க வண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அலப்போ நகருக்கும் மேற்கே கூட இருக்கலாமென்று உமார் எண்ணினான். ஆனால், அப்படிப் பார்க்கும்பொழுது, ஆராய்ந்து முடிவு காண்பது என்பது எளிதாகத் தோன்றவில்லை. ஏனெனில் மேலைத் திசையில் உள்ள பட்டணங்களின் பெயரெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அதுவும், அந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட காலத்திலே, முப்பது தலைமுறைகளுக்கும் முன்னே எப்பொழுதோ இருந்த ஒரு பட்டணத்தைப்பற்றிய தகவல் தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஆராய்வதும் ஆலோசனை புரிவதுமாக இருந்தார்கள்.

ஒருநாள் மாலை அவர்கள் இருவரும் தங்களுடைய ஆராய்ச்சி வேலையில் ஆழ்ந்து இருந்தபொழுது, வாசலில் இருந்தவாறே பழக்கமான ஒரு குரல் வணக்கம் தெரிவித்தது.

“ஞானமண்டபத்தின் இரண்டு தூண்களுக்கும் நலம் வருவதாக! உங்கள் உழைப்பு பலன் தருவதாக!” என்று வாழ்த்திக்கொண்டே, நீலத்தலைப்பாகையின் கீழே இருந்த முகத்தில் நிலவிய புன்சிரிப்புடன், நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவன் டுன்டுஷ் வருவதை மைமன் கண்டான். அவன் குரலைக்கேட்டதும், ஈட்டியால் குத்துப்பட்டது போன்ற எரிச்சலுடன் உமார் திரும்பிப்பார்த்தான். அவன் உள்ளத்திலே கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. தடுக்க முடியாத ஆத்திரம் குமுறிக்கொண்டிருந்தது.

“நட்சத்திர வீட்டிலே ஒரு பெரிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அங்காடியில் பேசிக்கொள்கிறார்களே! உண்மையா? அது என்ன?” என்று கேட்டான் டுன்டுஷ்.

உமார் கையிலிருந்த பேனாவைக் கீழே போட்டுவிட்டு எழுந்திருந்தான். “நான் வருகின்றபொழுது, வழியிலேதான் அந்த