பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


தூரத்துச் சமவெளியின் ஓரத்திலே, கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். வீட்டில் மேல்மொட்டை மாடிகளிலேயும் வெளி வராந்தாக்களிலேயும், நிசாப்பூர் மக்கள் இரத்தினக் கம்பளங்கள் விரித்துத் திருவிளக்குகள் ஏற்றி வைத்திருந்தார்கள். வீணையின் இசையும், மாதர்களின் சிரிப்பொலியும் மயங்கிய வெளிச்சத்தின் இடையிலே எழுந்து வீதியெங்கும் இன்பம் நிறைந்தன. வீதியின் வழியாக அரசாங்க அறிவிப்பாளர்கள், புதிய சகாப்தத்தின் முதல் நாளின் முதல் மணி தொடங்கி விட்டது என்று கூவிக் கொண்டு சென்றார்கள். தங்கச் சரிகையிட்ட அங்கியணிந்து, இளைஞரான சுல்தானின் தோளோடு தோளாக அருகிலே நின்றார் உமார். நிலப் பகுதியின் இருட் கோட்டிலே. பழைய சகாப்தத்தின் கதிரவன் மூழ்கி மறைவதை சுல்தான் பார்த்துக் கொண்டிருந்தார். வானம் தெளிவாக இருந்தது. சூரியன் மறைந்த அந்த இடத்திற்கு மேலே மட்டும் சிறிய மேகக் கூட்டம் ஒன்று இருந்தது. மறைந்த கதிரவனின் ஒளிக் கரங்கள் அந்த மேகங்களிலே பட்டுச் செம்மை படரச் செய்தன.

தாடி நரைத்த முல்லா ஒருவர் “அதோ பாருங்கள், வானத்திலே அல்லா சாவுக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்!” என்று கூறிக் கொண்டிருந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் கவனம் முல்லாவிடம் ஈடுபடும் முன்னாலே “காணுங்கள்! காணுங்கள்! உலகத்தின் தலைவரே! பேரரசே! வெற்றி வீரரே! தங்கள் சகாப்தம் தொடங்கி விட்டது” என்று கூவினான். மக்கள் கவனம் அவன் பக்கம் திரும்பி விட்டது.

கதிரவனின் கடைசி ஒளியும் மறைந்து விட்டது. உலகத்தில் இருளும், வானில் வெறுமையும் நிலவியது. வீதிகளிலே, சேர்ந்து பாடிக் கொண்டு போகும் கூட்டத்தினரின் பாட்டொலியும், அரண்மனையின் சபா மண்டபத்திலே பேரிகைகளின் ஒலியும் எழுந்தன. எங்கும் திருவிழாக் கோலமாக இருந்தது. உமார் வராந்தா ஓரத்துக்கு வந்து கீழே நோக்கினான். மங்கலான அந்த அரைகுறை வெளிச்சத்திலே, நீர்க் கடிகாரம் ஒன்று புதிய சகாப்தத்தின் மணிக் கணக்குகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். “உமார் காலத்தை மாற்றியமைத்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். முல்லாக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், காலம் மாறியா போய் விட்டது? இல்லை, கதிரவன்தான் மாறி