பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215


“ஆம் ஆம்!” என்று அலுப்புடன் கூறினான் உமார். அப்படி யிருந்தும் மீண்டும், “சரி. நான் போகிறேன். சிரிப்பும், பாட்டும் நிறைந்திருக்கும் அரண்மனைக்கு நீங்களும் வந்தால் என்ன? அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றான் ஜபாரக்.

“என்னுடைய நண்பனே, நீ பார்த்திருக்கும் எந்த மனிதனையும் காட்டிலும், அதிகமான இன்பத்துடன் நான் இங்கே இருப்பேன். நீ கவலைப் படாதே!” என்று ஜபாரக்கை அடக்கினான், உமார்.

ஜபாரக் உமார் எதிரில் சரி சரி என்று கூறினாலும், அவன் கூற்றை நம்பவில்லை. தனியாக இருக்கும் சமயத்தில், அமைதியான சூழ்நிலையில் உமார் மகிழ்ச்சியாக இருந்ததே கிடையாது என்பது அவனுக்குத் தெரியும், விகடனுக்கு அரண்மனைக்குச் செல்ல வேண்டுமென்று இருந்தாலும் உமாரை உத்தேசித்து அங்கேயே தங்கிவிட்டான். தன்னுடைய, இறுக்கிக் கொண்டிருக்கும் அரசாங்க உடையைக் களையவேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் உமார் மேல் நோக்கிப் போகும் படிக் கட்டுகளிலே ஏறினான். அவர்கள் இருவரும், சூழ்ந்திருக்கும் இருட்டிலே தட்டித் தடவிக் கொண்டு ஏறி உச்சிக்குச் சென்றார்கள். அங்கே அவர்களின் அருகிலே பெரிய வெண்கலப் பூகோள உருண்டை இருந்தது.

“ஜபாரக்! அதோ மேலே பார். என்ன தெரிகிறது?”

“நட்சத்திரங்கள். தெளிவான வானத்தில் நட்சத்திரங்கள் தெரிகின்றன!”

“அவைகள் நகருகின்றனவா?”

அந்த விகடன், தலையை ஒருக்கணித்துக் கூர்ந்து கவனித்தான். உண்மையில், அந்த நட்சத்திரக் கூட்டங்கள் நகருவதை அவனால் காணமுடியவில்லை. இருப்பினும், கதிரும் நிலவும்போல அவைகளும் தோன்றுவதையும் மறைவதையும் அவன் கவனித்து வந்திருக்கிறான். நட்சத்திர வீட்டில் இத்தனை நாட்களாக இருக்கும் அவன் இவற்றைக் கவனிக்காமல் இருக்கவில்லை. நட்சத்திரங்களின் இடத்தையும் ஒளியையும்கொண்டு, இரவு நேரத்தைக் கணித்துச் சொல்லக்