பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286


படிகள் சில இடங்களில் சிதைந்திருந்தன. அந்தமாதிரிச் சந்தர்ப்பங்களில், தடுமாறும்படி நேரிட்டால் பக்கத்துச் சுவரைப் பிடித்துக் கொண்டான். ரக்கின் உட்டுக்கோ, அந்தப் பாதை சர்வசாதாரணமாக இருந்தது. கையில் உள்ள விளக்கைப் பிடித்தபடியே தாவித் தாவிச் சென்றது வேடிக்கையாக இருந்தது.


34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!

கடைசியாக அந்தக் குறுகிய பாதையின் அடித்தளத்திலே நின்ற போது, இந்தப் படிக்கட்டுகள் எந்தக் காலத்தில் செதுக்கப் பெற்றனவோ? இது என்ன சுரங்கமா? என்று உமார் கேட்டான் ஆச்சரியத்தோடு.

“தாங்கள்தான் முதன் முதலில் இந்த இடத்திற்கு வந்து இது மாதிரியான கேள்வியைக் கேட்கிறீர்கள். கதிரவனையும், நெருப்பையும் மனிதர்கள் கடவுளாக வணங்கிக் கொண்டிருந்த காலத்திலே கட்டப்பட்டவைதான் இந்தப்படிக்கட்டுகள். இங்கு அவர்கள் தங்கத்தைத் தேடவில்லை. அதைக் காட்டிலும் பெரு மதிப்புள்ள அறிவுப் பொருளைத் தேடினார்கள், சரி. இப்பொழுது கவனியுங்கள், மீண்டும் பேசாதீர்கள்” என்று எச்சரித்தான் அந்தக்குள்ள அறிஞன்.

ஒரு நடைபாதை வழியாகத் திரும்பி அது ஒர் இயற்கையான குகை என்ற நினைப்பில் கடைசி வரை உமார் ஓடினான். கடைசியிலே, ஒரு தாழ்ந்த மரக்கதவின் அருகிலே ஒரு வேலின் மேல் சாய்ந்தபடி இருந்த ஒரு காவல் வீரனுடைய உருவம் அந்த இருளின் இடையிலும் தெரிந்தது ரக்கின் உட்டின் கதவைத் திறந்தான்.

அந்தக் காவல் வீரன் இவர்களைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அந்தக் குள்ளனைத் தொடர்ந்து, அந்தத் தாழ்ந்த கதவின் கீழே குனிந்து சென்ற உமார் உள்புறம் வந்து நிமிர்ந்து பார்த்த பொழுது, ஒரு பரந்த வெளியிலே, பல நபர்களின் இடையே தானும் இருப்பதை அறிந்தான். உட்கார்ந்திருந்த மனிதர்களுக்கு முன்னால், ரக்கின் உட்டின் உமாரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். குறுக்கில் இவர்கள் போவதைக் கண்டு மற்றவர்கள்