பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301


“ஏன் இருக்காது? வெளிப்புறத்தாருக்கும் அர்ப்பணம் செய்தோருக்கும் உண்மையில் பிறப்பிறப்புப் பெருந்தலைவன் நானே! நீ அதிலே ஐயங்கொண்டால், விரைவில் அதற்கு ஆதாரங்காணலாம். அவர்கள் என்னை மலைத்தலைவன் என்று அழைப்பதன் காரணம் என்னவென்றால், எங்களுடைய பலம் பொருந்திய கோட்டைகளெல்லாம், இந்தக் கழுகுக் கூட்டைப்போல மலையுச்சிகளிலேயே கட்டப் பெறுகின்றன. இது போன்ற இடங்களிலிருந்து சிலரே பல பகைவர்களை எளிதில் கொல்ல முடியும்” என்று உஷாராகச் சொன்னான் அவன்.

“கூட்டாளிகள் என்ற அவர்கள் உன்னை எப்படி அழைக்கிறார்கள்?”

“அவர்கள், இந்தப் புதிய மதத்தை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அவர்களே என் மதவாதிகள், அவர்களே தலைவர்கள். அவர்கள் என்னை மாதியின் தூதன் என்று எண்ணுகிறார்கள், மாதியைப்பற்றிய செய்தியறிவிப்பவன் என்று. ஜெருசலத்தில் நான் உனக்குக் கூறவில்லையா, அது போல. அவர்கள் என்னைக் கருதுகிறார்கள்.

“ஆனால், இப்பொழுதும் நான் உன்னை அப்படி (மாதியின் தூதர் என்று) நினைக்கவில்லை. சரி, வேறு இரண்டு பிரிவினரும் உன்னை எப்படி நம்புகிறார்கள்?”

“வேறு இரண்டு பிரிவா? ஐந்தும்தான் கூறிவிட்டேனே!”

“ஐந்துடன் எப்படி முடியும்? மொத்தம் ஏழு பிரிவுகள் அல்லவா?”

ஹாஸானுடைய கரிய கண்களிலே வியப்புப் படர்ந்தது. “நீ கணிதப் பேராசிரியன் என்பதை நான் மறந்துவிட்டேன். கொஞ்சம் எனக்குப் புரியும்படி கேள். நீ ஏன் ஏழு பிரிவுகள் என்று சொல்கிறாய்?”

“ஏழாவது கொள்கைக்காரர் என்று உங்களைப்பற்றிக் கூறுகிறார்கள். மேலும் உங்கள் பிரசாரர்கள், பாமர மக்களிடம், வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பது போலவும் வானத்தில் ஏழு கிரகங்கள் இருப்பது போலவும் உலகத்தில் ஏழு கொள்கைகள் இருக்கின்றன என்று பிரசாரம் செய்கிறார்கள். அது போலவே