பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343


அதிசயம்! அதிசயம்! என்று ஒரு முல்லா கூவினார். அந்த சாமியார் புன்னகையுடன் கூட்டத்தை நோக்கினான்.

‘அத்தாட்சி காட்டு! இது உண்மையில் அதிசயமாக இருந்தால் அத்தாட்சி காட்டு’ என்று ஒரு சிப்பாய் கூவினான்.

‘கம்மாயிரு, அத்தாட்சி இதோ காட்டுகிறேன்!’

எல்லாருடைய கண்களும் தன்னையே நோக்கும்படி சிறிது நேரம் நின்றான். பிறகு திரையை இழுத்தான். நேராக அந்த வெண்கலச் சட்டியின் அருகேசென்று, தன் இருகைகளாலும் அந்தத் தலையின் இருகாதுகளையும் பிடித்து மேலே தூக்கினான். முன்னுக்கு வந்து எல்லோருக்கும் தெரியும்படி அதைத் திருப்பிக்காட்டிவிட்டு மறுபடி சட்டியிலே வைத்தான். அந்தத் தலையைத் தனியே பார்த்தமக்கள்

‘நம்புகிறோம் நம்புகிறோம்!’ என்றார்கள்.

உமார் எழுந்து அந்தத் திரையின் அருகிலே போய் நின்று, தன் கைகளைத் தூக்கி கூட்டத்தை அமைதிப்படுத்திப் பேசத் தொடங்கினான்.

நண்பர்களே! இது அதிசயமல்ல! வெறும் கண்கட்டு வித்தைக்காரனின் தந்திரக் காட்சிகள்! இறந்துபோன மனிதன் பேசுவதில்லை! ஆனால், சற்றுமுன் உயிருடனிருந்து பேசிய மனிதன், நமக்கு அத்தாட்சி காட்டுவதற்காகக் கொல்லப்பட்டுவிட்டான். பாருங்கள் என்று கூறிக்கொண்டே, அந்தச் சட்டியை அப்புறப்படுத்தினான். அந்தச் சட்டிக்குப் பக்கத்திலே தரையிலே ஓர் அகன்ற துவாரம் இருந்தது. அந்த சாமியார் கோபத்துடன் முணுமுணுத்தான், கூட்டம் தள்ளிக் கொண்டு முன்னால் வந்தது.

உமார் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒருபுறம் சுவர் ஒரத்திலே கட்டியிருந்த திரையை அகற்றினான். அந்தச் சுவர் வழியாக ஒரு பாதை தென்பட்டது. விளக்குப் பிடித்துக்கொண்டே, அந்தப்பாதை வழியாகக் கீழே இறங்கிச் ஒரு இடத்திலே கால் வழுக்கியது. கீழே குனிந்து பார்த்தால் இரத்தம்.

‘உண்மையைத்தான் கண்டுபிடித்து விட்டீர். ஒய் அராபியரே! இங்கு கொலை நடந்திருக்கிறது!’ என்று கூட வந்த அந்தச் சிப்பாய் கூவினான். இன்னும் பலர் அந்தப்பாதை வழியாக