பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6
உயிரின் தோற்றம்

பொருள் முதல்வாதிகளின் எதிர்வாதம் மக்கள் செவியில் ஏறவில்லை. பலநூற்றாண்டுகளுக்கு அவருடைய சித்தாந்தமேதத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. அவருடைய கொள்கை என்ன? “பிராணிகளின் உடலிலுள்ள பொருளுக்கு உயிரில்லை. ஆன்மா என்னும் சக்தி அதனுள் புகுந்தால்தான் அவை உயிருள்ளவையாகின்றன”. பிளாட்டோவின் இக்கருத்து, இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தடையாகவிருந்தது. இக்கருத்தை அரிஸ்டாடில் என்ற கிரேக்க தத்துவாசிரியர் மேலும் வலியுறுத்தி வளர்த்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு இக்கருத்து நிலைப்பெற்றிருந்ததது. உயிர்ப்பிராணிகள் திடீரென்று தோன்றுகின்றன என்பதை நிரூபிக்க அரிஸ்டாடில் பல உதாரணங்கள் காட்டினார். அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்ச்சிக்கு கொள்கை பூர்வமான விளக்கமும் கொடுத்தார். எல்லாப் பகுதிப் பொருள்களையும் போல, உயிருள்ள பிராணிகள் இயங்காத ஒரு மூலமும், இயங்கும் ஒரு மூலமும் சேர்ந்து உண்டானது என்று அவர் கருதினார். இயங்காத மூலம் - பொருள் இயங்கும் மூலம் - உருவம். உயிர்ப்பிராணிகள் எல்லாவற்றின் உருவமும், உடலின் சத்தான ஆத்மாவின் வெளித்தோற்றமே. அதுதான் உடலை உண்டாக்கி அதனை உண்மையாக்குகிறது. பொருளுக்கு உயிரில்லை. ஆனால் பொருள் உயிரின் அணைப்பில் ஒரு உருவமாகி, ஆத்மாவின் சக்தியால் இயங்கி, நிலைக்கிறது. உயிரின் தோற்றத்தைப்பற்றிய அவருடைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே பிற்கால, கிரேக்க, ரோமன் தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. பிற்காலத் தத்துவங்கள் உயிர் பிராணிகள் திடீரென்று தோன்றுகின்றன என்ற அரிஸ்டாடிலின் கொள்கையை ஏற்றுக்கொண்டன. அக்கொள்கையை விளக்க மேலும் மேலும் புதிய ஆன்மிக வாத தத்துவங்கள் தோன்றின. புதிய பிளாட்டினியர் என்ற தத்துவவாதிகள், “பொருள்களின் வடிவமாற்றங்களோடு உயிரளிக்கும் ஆவி சேருவதால் உயிர்ப் பிராணிகள் தோன்றுகின்றன. உயிர்ப் பிராணிகளின்