பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.வானமாமலை
21

காலத்தில் இவ்வுலகில் வாழ்ந்துவந்த எண்ணற்ற சிற்றுயிர்களின் நடவடிக்கைகள் காரணமாக உண்டானவையே. அச்சிற்றுயிர்கள் பின்னர் பூமியினுள் புதைந்து விட்டன. சென்ற நூற்றாண்டிலும், இந் நூற்றாண்டின் முற்பகுதியிலும், மேற்கண்ட கருத்துகளின் காரணமாக இவ்வுலகில் காணப்படும் சேதனப் பொருள்கள் யாவும் உயிருள்ளனவற்றின் நடவடிக்கைகளால்தான் உண்டாக முடியும் என்று விஞ்ஞானிகள் அனுமானித்தனர். இக்கருத்து விஞ்ஞானத் துறையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தபடியால் உயிரின் தோற்றம் பற்றி ஆராய்வதற்குத் தடையாக இருந்தது. - - ஆராய்ச்சி, தொடங்கிய இடத்துக்கே செக்குமாட்டைப் போல், சுற்றிச்சுற்றி வந்து நின்றது. உயிரின் மூலத்தை அரிய, சேதனப் பொருள்கள் எவ்வாறு தோன்றின என்று அறிய வேண்டும். ஆனால் விஞ்ஞானிகளோ, சேதனப்பொருள்கள், உயிர் பிராணிகளால் மட்டுமே தோற்றுவிக்கப்படுகின்றன என்றனர். நம்முடைய உலகிலுள்ள பொருள்களை மட்டும் ஆராய்ந்தால், இத்தகைய முடிவுக்கு வரமுடிகிறது. சூரிய மண்டலத்திலுள்ள பலவான கோளங்களில் சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. அங்கே உயிருள்ளன வாழக்கூடிய நிலைமை இல்லை. அக்கோளங்களில் உயிருள்ளனவற்றின் தலையீடு இல்லாமலேயே சேதனப் பொருள்கள் உண்டாகின்றன. நிறப்பிரிகை - தர்சினி (Spectroscope) என்ற கருவியின் மூலம் நட்சத்திரங்களின் வாயு மண்டலங்களின் ரசாயன அமைப்பை ஆராய முடியும். நட்சத்திர வாயுமண்டலத்தின் ஒரு பகுதியைச் சோதனைச்சாலையில் ஆராய்ந்தால் எவ்வளவு துல்லியமாக முடிவுகள் கிடைக்குமோ அதேபோன்ற முடிவுகளை இக்கருவி அளிக்கிறது. ஒளிமிகுந்த சூடான நட்சத்திரங்களில் கரியிருப்பதை இக்கருவி காட்டுகிறது. மிகமிகச் சூடான இந்நட்சத்திரங்களை 0- வகை என்று அழைக்கிறார்கள். அவற்றின் மேற்பரப்பே20,000 முதல் 28,000 சென்டிகிரேட் வரை உஷ்ணநிலையுள்ளது. அவற்றில் சூடான,