பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24
உயிரின் தோற்றம்

மட்டுமே உள்ளது. அவற்றில் பலவகையான உலோகங்களின் ஆக்ஸைடுகள் உள்ளன. மக்னிஸியம், அலுமினியம், கால்ஸியம்,சோடியம், மாங்கனிஸ் முதலிய உலோகங்களின் ஆக்ஸைடுகள் விண்வீழ் கொள்ளிகளில் கரி குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம். முக்கியமாக மூல ரூபத்தில், நிலக்கரியாகவோ, கிராபைட் ஆகவோ, வைரமாகவோ அது இருக்கலாம். ஆனால் விண்வீழ் கொள்ளிகளின் சிறப்பான அம்சம் அவற்றில் உலோகங்களோடு கரி சேர்ந்த கூட்டுப் பொருள்கள் இருப்பதே. அவற்றிற்கு கார்பைடுகள் என்று பெயர். விண்வீழ் கொள்ளிகளில்தான் முதன் முதலாக கரி, இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகிய மூலங்களின் கூட்டுப் பொருளான கொகினைட் என்ற பொருள்இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டதுவிண்வீழ் கொள்ளிகளில் காணப்படும் கரியின் கூட்டுப் பொருள்கள் நமது ஆராய்ச்சிக்கு மிக முக்கியமான கரி நீரகப் பொருள்களே. ஹங்கேரியில், காபா என்ற ஊரின் அருகே விழுந்த விண்வீழ் கொள்ளிக்கல்லில், ஒஸோசிரைட் என்ற சேதனப் பொருளைப்போன்ற ஒரு கூட்டுப் பொருள் இருப்பது தெளிவாயிற்று. வேறு விண்வீழ் கொள்ளிகளிலிருந்து அதிகமான கரி, நீரக அணுக்களும், சிலவேளை ஆக்ஸிஜன், கந்தக அணுக்களும் கொண்ட பரமாணுக்களையுடைய கூட்டுப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. கரிநீரகப் பொருள்கள் விண்வீழ் கொள்ளிகளில் உள்ளன என்று நிரூபிக்கப்பட்ட காலத்தில், உயிருள்ள பொருள்களின் செயல்களினாலேயே, இயற்கை நிலையில் சேதனப் பொருள்கள் (கரிநீரகப் பொருள்கள் உள்பட) தோன்றமுடியும் என்ற தவறான கொள்கை நிலவி வந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு விண்வீழ் கொள்ளிகள் தோன்றிய விண்கோளங்களில் இருந்து மடிந்துபோன உயிருள்ளனவற்றின் செயலால் கரிநீரகப் பொருள்கள் இரண்டாவதாகத் தோன்றியவையே என்று சில விஞ்ஞானிகள் வாதித்தார்கள். இவ்வாதம் சரியல்லவென்று துல்லியமான ஆராய்ச்சி முடிவு கட்டியது. விண்வீழ் கொள்ளி