பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம் - 3
புரோட்டோ - புரதங்களின் தோற்றம்

தாவரங்களின் உறுப்புகளிலும், விலங்குகளின் உடல்களிலும் காணப்படும் சர்க்கரை, கொழுப்பு முதலிய சிக்கலான அமைப்புள்ள சேதனப் பொருள்களை உயிருள்ளவற்றிலிருந்து தான் பெறமுடியுமென்றும், செயற்கை முறையில் மனிதன் அவற்றை உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொருள்களை ‘உயிர்சக்தி’ என்றும் சக்தியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதால், ஆய்வு கூடத்தில் அவற்றைத் தயாரிக்கமுடியாதென்று அவர்கள் கூறினர். 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் சேதன ரசாயனநூலார் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாக இக்கூற்று ஆதாரமற்றதென நிரூபிக்கப்பட்டது. முன்பு தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் நமக்குக் கிடைத்து வந்த அலிசாரின், இண்டிகோ முதலிய சாயப்பொருள்களையும், சர்க்கரை கொழுப்பு முதலிய உணவுப்பொருள்களையும், டர்ப்பீன், டானின், அல்கலாய்டு, ரப்பர் போன்ற பயனுள்ள பொருள்களையும், கரிநீரகங்களிலிருந்தும், கரி, நீரகம் ஆகிய மூலங்களிலிருந்தும் உற்பத்தி செய்வது சாத்தியமாகிவிட்டது. சில வருஷங்களுக்கு முன் மிகவும் சிக்கலான அமைப்புள்ள வைட்டமின்கள், கிருமிநாச மருந்துகள், ஹார்மோன்கள் முதலியனவற்றைக் கூட செயற்கை முறையில் உற்பத்தி


† புரோட்டோ -புரதங்கள்: நாம் உட்கொள்ளும் உணவில் புரதங்கள் இருக்கவேண்டும். உடலுறுப்புகளை உண்டாக்குவது இதுவே. இவை கரியும் நைட்ரஜனும், மற்றும் மூலப்பொருள்களும் சேர்ந்த சிக்கலான அமைப்புடைய பொருள்கள். இவற்றுள் பலவகையானவை உண்டு. அவையனைத்தையும் புரோட்டோ- புரதங்கள் என்று அழைக்கிறார்கள்.