பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உயிரின் தோற்றம்


இடமாற்றம் முன்பும் மற்றவை அடுத்து அடுத்தும் நிகழ்ந்தால் வேறொரு பொருள் உண்டாகும். முற்கூறிய மூன்று வகையான நிகழ்ச்சிகள் பல்வேறு பொருள்களில் நிகழும்போது ஆயிரக்கணக்கான பொருள்கள் உண்டாகின்றன. உயிருள்ளனவற்றில் காணப்படும் பொருள்கள் யாவும் இவ்வாறே உண்டாகின்றன. இந்நிகழ்ச்சிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் அவை எல்லாவற்றிற்கும் பொதுவான தன்மையொன்றிருப்பதைக் காணலாம். இந்நிகழ்ச்சிகளனைத்திலும் தண்ணீரை உண்டாக்கக் கூடிய மூலங்களான ஆக்ஸிஜனும், நீரகமும் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணலாம். சேதனப் பொருள்களின் அணுக்கூட்டில், கரி அணுவோடு சேர்ந்திருக்கும், நீரக அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் பிரிக்கப்படுகின்றன. அல்லது அவை கரி அணுவோடு சேர்க்கப்படுகின்றன. இம்மாறுதல்கள் உயிருள்ளனவற்றில் நடக்கும் ரசாயன மாறுதல்களில் மிக முக்கியமான மாறுதலாகும். இயற்கையான நிலைமையில் உயிருள்ளவற்றில் நடக்கும் எண்ணற்ற மாற்றங்களுக்கு இம்மாற்றங்களே அடிப்படையாவன. உயிருள்ளவற்றில் மாறுதல்கள் விரைவாகவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகவும் நிகழ்கின்றன. அவை எந்நிலைமைகளில் திகழ்கின்றன என்று நாம் பின்னர் ஆராய்வோம். வேறு மாறுதல்கள் நிகழச் சாதகமான நிலைமைகள் இல்லாவிடினும், தண்ணீரும் சேதனப் பொருள்களும் சேர்ந்து மாறுதல்களை உண்டாக்குகின்றன. அவை மற்ற மாறுதல்களைப் பார்க்கிலும் மெதுவாகவே நிகழ்கின்றன. சாதாரண நிலைமைகளில் சேதனப்பொருள்களின் கரைசல்களைச் சேர்த்து வெகுநேரம் வைத்திருந்த கூட்டு முறையில் பல பொருள்கள் உண்டாகின்றன என்பது ரசாயனிகளுக்கு வெகு காலமாகத் தெரியும். சிறிய எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டு கூட்டுப் பொருள்கள் பெரிய எண்ணிக்கையுள்ளனவாகவும், சிக்கலான அமைப்புள்ளனவுமான அணுக்கூட்டுகளாக மாறுகின்றன. இது பல்வேறு வகைகளில் நிகழ்கின்றது. 1891இல் பார்மலின் என்ற பொருளை இதன் ஓர்அணுக்கூட்டில் ஓர்