பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

உயிரின் தோற்றம்


ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆனபின் உயர்களின் அமைப்பு வளர்ச்சியுற்றன; அவை சூழ்நிலைக்கேற்ப அவற்றின் அமைப்பு திருந்தியது. முதலில் அவை சேதனப் பொருள்களையே உட்கொண்டன. காலம் ஆக, ஆக சேதனப் பொருள்கள் குறைந்தன. மூல உயிர்கள் ஒன்று மாயவேண்டும், அல்லது தங்களுக்கு வேண்டிய உணவை சூழலிலுள்ள அசேதனப் பொருள்களிலிருந்து பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவ்வாறு பெறும் வகையில் தங்களுடைய வினை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. சூழலிலுள்ள பொருள்கள் கரியமிலவாயுவும் நீரும், சேதனப் பொருள்களை உண்டாக்கக்கூடிய பொருள்கள். சில உயிர்கள் இவ்வாறு சேதனப்பொருள்களை அவற்றிலிருந்து உண்டாக்குவதில் வெற்றியடைந்தன. இவ்வாறு வளர்ச்சியுறும்போது சூரியனது சக்தியைக் கிரகித்து அதன் உதவியால் கரியமில வாயுவைப் பிரித்து, அதிலுள்ள கரியிலிருந்து சேதனப் பொருள்களை தங்களின் உடலிலேயே அவை தயாரித்தன. இவ்வாறு சிறிய பூண்டுகள் தோன்றின. நீலம் கலந்த பச்சை நிறமான ஆல்கே, இவ்வாறு தோன்றிற்று. (அது பூமியின் பழங்காலத் தரையில் புதையுண்டு இன்றும் கிடக்கிறது.)

மற்றைய ஜந்துக்கள் பழைய முறையிலேயே உணவு உட்கொண்டன. ஆனால் இப்போது ஆல்கே அவற்றின் உணவாயிற்று. அதிலிருந்து சேதனப் பொருள்களை அவற்றின் உடல்கள் பெற்றன. இவ்வாறு முதன் முதலில் விலங்கினங்கள் உலகில் தோன்றின.

உயிரின் உதய காலத்தில் (இக்காலத்தை இயோ ஸோயிக்-காலம் என்று விஞ்ஞானிகள் அழைப்பர்) தாவரங்களும், விலங்குகளும், இன்று காணப்படும் பாக்டீரியா, அல்லது அமீபா போன்ற ஒற்றை அங்கஜீவிகளாக இருந்தன. வாழ்க்கையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் பல ஜீவ அணுக்கள் கூடிய உயிர்ப் பிராணிகள் தோன்றியது மிக முக்கியமான முன்னேற்றமாகும். சிக்கலான அமைப்புடையனவும், பல்வேறு வகையானவுமான உயிர்ப் பிராணிகள்