பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

உயிரின் தோற்றம்


தாவரங்கள் தோன்றின. (உதாரணங்கள்: பெரணி (பூக்கா தாவரங்கள்), குதிரைவால்-Horse Tail கைத்தடி போன்ற பாசி) கடற்பாறையிலும், ஆற்றங்கரையிலும், நீரிலும், நிலத்திலும் வாழும் எண்ணற்ற பிராணிகள் வாழ்ந்தன. வழுவழுப்பான அவற்றின் தோல் காய்ந்துவிடக்கூடாதாகையால் அவை நீர்நிலைகளின் அருகேயே வாழ்ந்தன. நீரிலேயே (மீனைப் போல) ஆயிரக்கணக்கில் உயிர் வித்துகள் சிதறின. இக்கால முடிவில் ஊரும் ஜந்துக்கள் தோன்றின. அவற்றின் தோலமைப்பு தோல் உலர்ந்தாலும் கெடுதல் ஏற்படாதபடி அமைந்திருந்தது. நீர் நிலைக்கு அப்பால் வெகுதூரம் சென்று வாழ இத்தன்மை அவற்றிற்கு உதவி செய்தது. அவை வெகுதூரம் பரவின. அவை உயிர் வித்துக்களைச் சிதறாமல், முட்டையிட்டன.

இருபத்திரண்டரைக் கோடி வருடங்களுக்கு முன் இக்காலத்தை ‘பெர்மியன்’ காலம் என்றழைப்பர்). பூக்காத பெரணி வகைச் செடிகள் மாய்ந்து தற்கால கூர்நுனி மரங்கள் (சவுக்கு போன்றவை) தோன்றின. உலர்ந்த சீதோஷ்ணத்துக்கு ஏற்ற வகையான உடலமைப்பு பெற்ற ஊரும் ஜந்துக்கள் பெருகின. நீரிலும் நிலத்திலும் வாழும் ஜந்துக்கள் அழிந்தன. பெர்மியன் கால மடிவுக்குப் பின் பூதாகரமான ஊர்வன தோன்றிப் பெருகின. விலங்குகளோ, பறவைகளோ அக்காலத் திலும் தோன்றவில்லை.

ஊர்வன மிகப்பெருகி வாழ்ந்திருந்த காலத்தில் மரங்களும், பூக்களும், பூண்டுகளும் தோன்றின. (அவை தற்காலத்திலுள்ளவற்றை ஒத்திருந்தன.) ஊர்வன சக்தி மிகுந்தவையாக, நிலத்திலும் நீரிலும் வானத்திலும் ஆதிக்கம் வகித்தன. டினாசார்கள் என்ற பூதாகரமான ஊரும் ஜந்துக்கள் நிலத்தில் உலவித் திரிந்தன. பறக்கும் டிராகான் என்னும் பிராணிகள் வானத்தில் பறந்தன. பாம்புகளும், இட்சியோ சாரியா, பிளியோசாரியா போன்ற ஜந்துக்கள் கடலில் வாழ்ந்தன.

மூன்றரைக் கோடி வருஷங்களுக்கு முன் குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் விலங்கினங்கள் தோன்றின. மூன்றாவது கற்பகாலம் என்றழைக்கப்படும் காலத்தில் ஊரும் ஜந்துக்களில் பெரியவை பெரும்பாலும் மாய்ந்துவிட்டன. பலவகைப்