பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழாக்கம்: நா. வானமாமலை

21


உயிர்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விளக்கும் விதிகளைக் கண்டுபிடித்திருக்கும் நவீன இயற்கை விஞ்ஞானம் கருத்து முதல் வாதத்தையும், நிலை இயல் முறையையும், ஏகாதிபத்தியப் பிற்போக்கு வாதங்களையும் உடைத்தெறிந்து விட்டது.

உயிர்ப் பிராணிகளின் உள்ளமைப்பைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் தற்காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. உயிரென்பது பொருளின் ஒரு சிறப்பான வடிவமே என்பதைச் செயல்முறை நிரூபிக்க முடியும் என்று நம்பக் காரணங்களிருக்கின்றன. சோவியத் உயிர் நூலாரின் வெற்றிகள், சுலபமான அமைப்புடைய சிற்றுயிர்களை செய்கையிலேயே படைக்க முடியும்; அது மட்டுமல்ல, வெகு சீக்கிரத்திலேயே செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நமக்களிக்கிறது.

முற்றிற்று.