பக்கம்:உயிரில் கலந்தது.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3

உன்னே என்னிடமிருந்து பிரித்து விலக்கிவிட நீ ஏன் எத்தனம் இதய்தாய்? சொல்லமாட்டாயா, வாணி?...சொல்லேன் வாணி! விதி உன் வாயை அடைத்து விட்டு, உன் தோழியின் வாயைத் திறந்து விட்டதோ? ம்... விதியாவது, தெய்வ மாவது எல்லாம் இந்த மானிடப் பிறவிகள் ஆடுகிற

- . * நாடகம்தான்!

ஞானசீலனுக்கு வெறி மூண்டது. வாணி என்று இன் குரல் ஒவிக்கக் கூவியவாறு அவளை நெருங்கினர்.

“நில்லுங்கள். என் தவசீலியை நீங்கள் மணப்பது குறித்து உங்கள் கடைசி முடிவைக் கேட்டுப்போகவே நான் வந்திருக்கிறேன். அவளுக்கு உடல் நலமில்லை. இரவு தொட்டு பச்சைத் தண்ணீரைத் தொடாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிருள். ம்...சொல்லுங்கள்!” -

‘இதோ என் முடிவைச் சொல்லி விடுகிறேன்!” என்று கிறுக்குக் கொண்டவரெனப் பிதற்றினர். அதன் தொடர்ச்சி யாக; வாணியை அண்டி அவளது மென் கரங்கள் இரண்டை யும் பற்றினர். பற்று அதிகரிக்க, பாசம்பெருகிக்கொப்புளிக்க, அன்பு பண்பாட அவர் அவளைப் பிடித்து இழுத்து நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு வாணியின் தூய்மை செறிந்த அழகுக் கதுப்புக் கன்னங்களிலே முத்தம் பதிக்க முனைந்திட்ட வேளை யிலே “நில்லுங்கள்!” என்ற எதிர்ப்புக்குரல் ஒன்றை முன் ளுேடவிட்டு பின்ளுேடி வந்தாள் தவசீலி. அவள் முகம் சோர்ந்திருந்தது.

“சமுதாயத்தின் முதல் காவலன் எழுத்தாளன்தான். என்று பிரமாதமாகச் சொல்லுகிற நீங்களா இந்த பயங்கர செயலைச் செய்யத் துணித்தீர்கள்? மாசுபடிந்த உங்கள்ையா தான் என் ஆண்டவணுக மதித்துக் கும்பிட்டேன்! ஐயோ என்னைப்போல ஒரு அபாக்யவதி இந்த உலகத்திலே வேறு ஒருத்தியும் இருக்கவேமாட்டாள்” என்று ஓங்கி ஓங்கி மண்டை யில் அடித்துக் கொண்டு அழுதாள் தவசீலி. ‘நான் கறிை