பக்கம்:உயிரில் கலந்தது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


பாசம், பண்பு, அன்பு, ஆதரவு, அணேப்பு, பரிவு, ஒழுகிப் போதல், தட்டிக் கொடுத்தல் போன்ற விதவிதமான குணம் பாகுபாடுகள் சங்கமிக்க, அதன் விளையாட்டாக, புயல் விளைத்து, தென்றல் வீசச் செய்து, அனைத்திற்கும் ஈடு கொடுத்து, இறுதியில் புடமிட்ட பொன்னக இந்தப் பொன்: மனம் இலங்கவல்ல வல்லமையும் பக்குவமும் கைவரும் பொழுதுதான், மனம் மாண்பு பெறுகிறது’

கதைப் படைப்பாளர் ஞானசீலன் துரங்காத மனத். துடனும், துரங்கி வழிந்தவிழிகளுடனும் அல்லாடிக்கொண்டே, சாய்மானப் பெஞ்சியில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்த அவரது நெஞ்சத்தில், புதிது புதிதான நினை வுகளும் சிந்தனைகளும் இடம் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டன. காற்றாட, அமர்ந்தவருக்கு, காற்றின் இதமான அணேப்பு அனுசரணையாக இருந்தது. மடிப்புக் கலையாத சட்டையைத் தன்னுடைய தோல் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, டர்க்கிடவலே எடுத்து பணியன் மூடிய உடம்பில் போர்த்திக் கொண்டார்; பிறகு, அதை எடுத்து, நாட்டுப்புறத்தானை நினைவூட்டும் பாணியில், தலையில் சுற்றிக் கொண்டார். நினைவுகள் சுற்றிய மனத்தைச் சுற்றி, சிகெரெட்டுப் புகைச் சுருள்களும் சுற்றலாயினt

காலத்தையும் தூரத்தையும் தன்னுடைய இரும்புச் சக்கரங்களில் போட்டு மிதித்துக் கொண்டே ஓடிக்கொண் டிருந்தது அந்த ரெயில் வண்டி. - ஞானசீலனுக்குக் கொட்டாவி வந்தது. அன்னே அன்புடன் போட்டுக் கொடுத்து அனுப்பிய காப்பியை பிளாஸ்கிலிருந்து ஊற்றி, வாயில் ஊற்றிக் கொண்டார். கிறக்கம் தெளிந்தாற்போல ஒரு பிரமை. ஆனால், தெளிவடை உாத மனப்பிரமையினூடே, அவரது கண்கள் சுற்றிச் சூழ. நோக்கின. - 3

ஒருபுறம், புதுமணத் தம்பதி. அவள் ஆசைக் கனவுகளை தன்னுடைய அழகு மிளர்ந்த இதழ்க்கரையில் நெளியவிட்ட