பக்கம்:உயிரில் கலந்தது.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


turrtŕ யாரைப்பற்றி யெல்லாமோ எண்ணித் திளைத்த அவரது மனக்கண்முன், மனக்கடல் ஆர்ப்பரித்து முழங்கிய காட்சி ஏடு விரிந்தது.

தவசீலியின் உருவம் நிழலாடியது, உள்ளம் என்கிற கிழியில். நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று விச்ைசரம் தொடுத்த அவளது துணிவும் நிழலாடியது.

அப்பால், வாணியை நினைந்தார். “நீ என்னைக் காதலிக் கிருயா?” என்று அவள் முன்னே வைத்த கேள்வியின்

துடுக்குத்தனத்தைப் பற்றிய சிந்தனை விரிந்தது.

அதற்கப்புறம், ‘தம்பி, நீ யாரையாவது காதலிக் கிருயா?” என்று பாசத்துடன் கேட்ட பான்மையை எடை போட்டார்.

இறுதியில், ‘அம்மா, எனக்கு வாணியை நிரம்பவும் பிடித்திருக்கிறது!’ என்று அவர் முத்தாய்ப்பிட்டு மொழிந்த முடிவையும் ஆரம்பக் கதையாக்கினர் அவர்.

பெரியவர் மாசிலாமணியின் ஏக புதல்வி கமலாட்சியைக் குறித்து, குறி பார்க்க அவர் உள் மனம் நாடிய சமயம், எழும்பூர் வந்து நின்றது! -

ஞானசீலன் தடுமாறியது.ாக்கத்தைத் தடுமாற விட்டபடி, தமக்குரிய சாமான்களைக் கையில் எடுத்துக் கொண்டார். தொங்கவிடப்பட்டிருந்த கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டார். அப்பொழுது அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த பாவையர் முகங்களில் எல்லாம் அவர் வாணியையே தரிசித்தார். கொண்டைப் பூச்சரமும், மங்களத் திலகமும், எழிலாடிய வளைகளும் விளங்க, வாணி தோன்றாமல் தோன்றிஞள்!...

அதே கணத்தில், “ஐயா! ஸார்!’ என்று தடுமாறி ஓடி வந்து ஞானசினின் கால்களில் விழுந்தாள் தவசீலி: ... “... -