பக்கம்:உயிரில் கலந்தது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

“அதனால் என்ன? இன்னொருதரம் ஆகட்டும், கமலாச்சிக்கும் அவள் புருஷனுக்கும் ஒரு விருந்து வையுங்களேன், வருகிறோம். இப்பொழுது டயம் ஆகிடுச்சு. கார் பெட்ரோல் போடப் போயிருக்குது. நாங்க இப்படியே கொஞ்ச தூரம் நடந்து போய்க் கொள்கிறோம், வரட்டுமா?”

அழகி மறைந்தாள்!

அழகு மறையவில்லை!

வந்த நண்பர் படையுடன் திரும்பினார் ஞானசீலன்.

ராஜா மிராஸ்தார் ஆஸ்பத்திரி, தாமஸ் ஹால், பஸ் ஸ்டாண்டு, மணிக்கூண்டு, ஞானம் டாக்கீஸ், டவர் டாக்கீஸ், சாக்கடைத் தேக்கம், கீழவாசல் மார்க்கெட் குணங்குடிதாசர் ஷர்பத் ஸ்டால் என்று நடை தொடர்ந்தது.

ஞானசீலனும் தொடர்ந்தார்.

அவருடன் அழகும் தொடர்ந்தது.

கீழவாசல் திருப்பத்தில் அவர் விடை பெறுமுன், பஜார் போஸ்டாபீஸ் தெரு வழியாக ஒரு பெண் கடந்து செல்வதைக் கண்டார். பார்த்த முகமாக அது இருந்தது. தவசீலியாக இருக்குமோ என்ற ஐயப்பாடு அவருக்கு.

மசூதியில் எட்டு முறை மணி அடிக்கப்பட்டது.

18.நிரஜா-ஓர் உண்மை!

னிதனின் பலவீனம்தான் கடவுளின் பலம்போலும்!பலவீனத்தில் விளைந்த பலத்தின் இந்த மகத்துவம் ஒன்றே தான் சிருஷ்டிப் புதிரின் ரகசியமோ?

அடிப்படைக் குறைகளின் கூட்டு மொத்தப் புள்ளிதான் மனிதன்!-இந்த ஒரு நினைவுதான் ஞானசீலனின் மன அடி