பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மெகா சீரியல் அபத்தங்களை மிகத் தெளிவாகப் பதிய வைக்கிறார். எய்ட்ஸ் நோய் பற்றிய தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களும் அறிய வேண்டியவை; மேலும், ஆணுறையினால், நோயைத் தவிர்க்க முடியும் என்ற விளம்பரங்கள் மக்களைத் தவறான முடிவுக்கு வரச் செய்கின்றன. ஆணுறைகளில் கண்ணுக்குப் புலப்படாத துளைகள் இருக்கக்கூடும். இதனால் எய்ட்ஸ் நோய்க்கு ஆணுறை முழுதும் பாதுகாப்பென்று கூறிவிட முடியாது. கருத்தடைக்கும் அது நூறு சதவிகிதம் உகந்த சாதனமல்ல என்பதை அறிய வாய்ப்பில்லை. இவ்விளம்பரங்களை விட, கட்டுப்பாடான ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்நெறியே உகந்தது என்பதை, இவரைப் போன்ற எழுத்தாளர்களால் மட்டுமே வலியுறுத்த முடியும். கட்டுப்பாடான வாழ்நெறியைப் பயிற்று விக்க, சிறுவர், சிறுமியருக்குப் பெற்றோரும் ஆசிரியப் பெரு மக்களும் வாழ்ந்துகாட்டும் வகையிலே தான் வளம் பெற முடியும். இக்காலத்தில், கணினி, தொலைக்காட்சி ஆகிய தகவல் சாதனங்கள், நம் இளைய தலைமுறையினரின் அறிவுசார் துறையிலும் பொழுது போக்குக் களியாட்டம் என்றும் பெரும் பங்கு வகிக்கின்றன. சினிமா போன்ற தகவல் ஊடகங்கள் முழுதுமாக வாணிப ரீதியில் இயங்குகின்றன. கதாசிரியர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருமே புதிய வளமான சமுதாயத்துக்கான சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இயங்க வேண்டும். இந்த நூலில் இயற்கையை மாசுபடுத்தும் பல கூறுகளை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். நாம் அனைவருமே இந்த மாசுகளைக் களைந்து பாரத அன்னை எழிலுடன் விளங்க முயற்சி செய்வோம். அழகு தமிழில் சிறப்பாக மகளிருக்காகவும் மற்றவருக்காகவும் ஆழ்ந்த கருத்துக்களை அளித்திருக்கும் இந்த எழுத்தாளர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து இலக்கியங்கள் படைக்க வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும். நன்றி! ഠ . വഷ ല-്e}റ് 一て下