பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. என்னுரை இந்த நூலை நான் எழுத முயற்சி மேற்கொண்டதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். நான் ஒரு பெண். இதற்கு மேலாக, இதை எழுதுவதற்குரிய மருத்துவ அறிவோ, வேறு வகையில் குறிப்பிடும்படியான தகுதிச்சான்றோ என்னிடம் இல்லை. படைப்புக் காலத்திலிருந்து இயங்கி வந்திருக்கும் பெண்மை யின் கூறுகளை இன்ப துன்பப் போராட்டங்களைச் சுமந்து இன்றுவரை முன்னோக்கிக்கொண்டு ஆண்டு ஆதிக்கம் தோற்று விக்கும் அறைகூவல்களை எதிர்கொள்ளும் கோடானு கோடிப் பெண்களில் ஒருத்தி. வாணிபத்துக்காக உடலை அழகு" என்று ஒப்பனை செய்து கொள்வதற்கான சாதனங்களுக்கான வாணிபங் களில் தங்கள் இளமையைத் தொலைக்கும் பெண்ணானாலும் பிழைப்புக்காக, நீராதாரமும் வாழ்வாதாரங்களும் வறண்ட மண்ணிலிருந்து பெயர்ந்து அவற்றுக்கான எந்த உத்தரவாதமும் இல்லாத இடங்களில் உழைக்க வந்து ஒருசில ரூபாய்களுக்காக அன்றாடம் செத்துப் பிழைக்கும் ஆயிரமாயிரம் பெண்களா னாலும், வலிகள் வெவ்வேறு வகையானவை அல்ல. பெண் போகத்துக்குரியவள். அவள் உடம்பு அவளுக்குச் சொந்தமல்ல. திரைக்கு முன்னும், பின்னும் திரையிலும் அவள் யாருக்கோ கட்டுப்பட்டு இயங்குகிறாள். இந்த வகையில் அதிநவீன கணிப் பொறியில் தேர்ச்சி பெற்று பல ஆயிரங்கள் வருமானம் பெறுகிற வளும், பாதுகாப்பற்ற நெருக்கடியில் கைக்குழந்தையுடன் இரவைக் கழிக்கிறாளே, அவளும் ஒன்றுதான். இவர்களின் வேத னைகள், வலிகளை என்னால் உணர முடிகிறது. இருபதாம் நூற்றாண்டில் பிறந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வரும் எனக்கு, பெண்களின் பிரச்னைகள், இன்னமும் மகா பாரதத்தின் குந்தி காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதை நன்கு உணரமுடிகிறது. நான் சிறுமியாக இருந்த காலத்தில் ஒவ்வொரு விட்டிலும் எட்டு, பத்துபேறுகள் நிகழ்வது சாதாரணமாக் இருந்தது.