பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அவர்கள் குடும்பம் மானமாக வாழவேண்டும் என்ற கட்டுக் கோப்பு விதிகளில் அவள் மட்டுமே அழுத்தப்படுவாள். பசி, பட்டினி, இருப்பு, இல்லாமை எதுவும் வெளியே தெரியலாகாது. ஆனால் இந்த வெளியே தெரியலாகாது என்ற சட்ட விதி அவனை, அவன் போக வாழ்வைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் ஈரல்குலைக் கட்டியினால் பாதிக்கப்பட்டு மரித்த குழந்தைகள் அதிகம். உழவர் குலப் பெண்கள் பகலெல்லாம் யாரோ ஆண்டைகளின் வயல்களில் வேலை செய்யும்போது அவர்கள் குழந்தைகள் மண்ணிலும், சகதியிலும் விளையாடிக் கொண்டிருக்கும். மரங்களில் தூளிகளில் உறங்கும். பசித்தழும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும் என்று கல்மனம் கொண்ட கணக்கப்பிள்ளையும் குரல் கொடுப்பான். அக் குழந்தைகள் ஈரல் குலைக்கட்டிகளால் மரிக்கவில்லை. உயர் மட்டங்களில் உடலுழைப்பில்லாத ஆண்களின் போகப் பொருளாகப் பிள்ளை பெறும் இயந்திரங்களாக முதற் குழந்தை பெற்று இரண்டு மாதங்களுக்கு முன், அடுத்த குழந்தைக்கு அவள் வயிற்றில் இடம் வந்துவிடும். இதெல்லாம் இல்லற ஒழுக்கம். உடல் உழைப்பில்லாத வர்க்கங்களில் பெண் முழு அடிமை எனலாம். கைம் பெண்கள், கணவருடன் வாழாத அபலைகள் இவர்களில் எவரேனும் இருட்டுக்குள் சுமை சுமக்க நேரிடலாம். அரசல் பொரசலாக வரும் பொசிவுகள், அந்த அபாக்கியவதிகளை மரணக் கோடிக்கு இட்டுச் செல்லும். வெளிப்படையாக ஆறு, குளம் என்று முடிவு தேடாதவர்கள், சுமை கழியும் என்ற அச்சத்தில் நச்சு மருந்துகளை ஏற்றிக் கொண்டு சுமை கழியாமலே போய்ச் சேருவார்கள். ஆனால் ஆண்டுக்காண்டு கரு சுமந்தும் சாகக் கொடுத்தும் துன்பம் அனுபவித்தவர்கள், இந்தச் சுமைகளைக் கழிக்க வெளிக்குத் தெரியாமல் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் நெஞ்சில் முட்களை ஏற்றிக்கொண்டு வலி அனுபவித்ததும் வரலாறுதான். ஒன்பது பெண்களையும், நான்கு ஆண்களையும் ஈன்றெடுத்த தாயொருத்தி, 'ஓ! கடைசியாக இந்த இரண்டும் வேண்டாம் என்று, எள்ளு, கொள்ளு என்று மருந்தெல்லாம் தின்னு தொலைத்தேன். அதன் பயன்தானோ என்னமோ, இரண்டும் பெண்களாக, அக்கினியைப் குளிப்பாட்டி அமாவா சைக்குக் கொடுத்தாற்போல் பிறந்தன. பாவம், பாவம், பாவி,