பக்கம்:உயிர் விளையும் நிலங்கள்-குடும்பக் கட்டுப்பாடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அதுங்க கல்யாணத்துக்கு அத்தனை துன்பப்பட்டேன்' என்று வாழ்நாளெல்லாம் வேதனைப்பட்டாள். பிள்ளை வேண்டாம் என்று நினைப்பதும்கூடப் பாவமாயிற்றே! பழைய மரபுகளில் பிரசவித்தவள் இரத்தப் பெருக்கால் தளர்ந்தாலும் தண்ணிர் கொடுத்தால் சீழ் பிடிக்கும் என்று நினைத்து, அவளைச் சாகவிட்ட கொடுமைகள் உண்டு. அக்கினி நட்சத்திரங்களில் மகப்பேறு பெற்று, கடை மருந்துகளையும் ஏற்றிக்கொண்டு தண்ணிர், தண்ணிர் என்று தவித்தாலும் தண்ணிர் கிடைக்காது, மூத்திரத்துக் காகக் கொடுக்கப்பட்ட சட்டியைப் பார்த்து நாவை ஈரமாக்கிக் கொண்ட கொடுமைகள் இருந்தன. மரபுகளும் அறியாமைகளும் மகளிர் ஆளுமையிலும் ஆற்றலிலும் செருகிய ஊசிகள் எண்ணற்றவை. மாதவிலக்கு நாட்கள் மிகக் கொடுமையானவை. பட்டினி போடுவார்கள். அந்நாட்களில் தீண்டாமை. இந்நாட்களில் மகளிரே தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் இரட்டைச் சுமை சுமக்கும் அலுவலகப் பெண்களுக்கு விடிவு இல்லை. விடுப்பில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்தவள், பள்ளி திறந்த அன்றே பள்ளிக்கு வந்தாகவேண்டும்; அத்துடன் மூன்றாம் மாடிக்கும் தரைத்தளத்துக்கும் பகலுணவுக்கு முன் மூன்று முறை ஏறி இறங்கும் வகுப்புகளைக் கொடுப்பவளும் பெண் தலைமை ஆசிரியைதான். பெருங் குடும்பங்களின் தலைமுறைப் பெண்கள் இன்று இல்லை. சிறு குடும்ப மாத்திரைகள், தடுப்பான்கள் என்று ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு மாத மனஅழுத்தத்துடன் பக்கவிளைவு களையும் ஏற்கும் பெண்கள், பலரின் வேதனைகள், அவர்களைக் கொடுமைக்காரிகளாகவும், கருணையற்றவர்களாகவும் மாற்றி யுள்ளன. இந்த நிலையில் அவளுக்கு இயல்பில்லாத எதிரான தீச் செயல்களுக்கு உட்படுத்தப்படுகிறாள். மது வாணிபமோ, பெண் வாணிபமோ, பழிசுமப்பவள் அவளே! காலம் காலமாக அவளுடைய கருப்பைச் செயல்பாடுகளைக் குதறும் வகையில் அவளே தன்னைக் கழுவிலேற்றிக்கொண்டு தலைமுறை தலை முறையாக வேதனை பொறுத்திருக்கிறாள். அவள் உடல்கள், இந்நாள் வரை எத்துணை ஆய்வுகளுக்குச் சோதனைகளாகவும், பலிக்களமாவும் தீர்ந்திருக்கின்றன! வெளியே சொல்ல முடியாத துண்டில் முள் வேதனைகள். இன்றும் பத்திரிகைச் செய்திகள்,