பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உரைநடை வளர்ச்சி

கின்றன. ஆனால் நடை, மக்களது பேச்சு நடைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.

ஆறுமுக நாவலர்-இராமலிங்கர்

இந்நூற்றாண்டின் பிற்காலத்தில் புலமை பெற்றோரில் சிலர் உரைநடை நூல்கள் எழுதினர். அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார், ஆறுமுக நாவலர், இராமலிங்க சுவாமிகள், அராபிக் கதை ஆசிரியர் முதலியோர் பேச்சு நடையின் விறுவிறுப்பையும் உயிர்த்துடிப்பையும் உரைநடையில் ஏற்றினர். இராமலிங்கர் புலமை நடையையும் பேச்சு நடையையும் இணைத்து, அழகையும் ஆற்றலையும் உரைக்கு வழங்கினார். பேச்சு நடைக்கு மிக நெருக்கமான நடையில் இவர் கடிதங்கள் எழுதினார். இவர்கள் தமிழ் உரை நடையை மக்களுக்கு விளங்கும் முறையில் எளிதாக்கப் பாதை. வகுத்தாக்கள். இவர்களும், இவர்கள் காலத்தில் எழுதிய தும் பலரும் எழுதிய நடை தற்கால உரைநடைக்கு முன்னோடியாகும். இவர்கள் நடை எளிதாகவும் விளங்கும்படியாகவும் இருப்பதற்கு அவர்கள் பொதுமக்கள் படிப்பதற்காக, எழுதியதே காரணமாகும். இவர்களில் சிலரது நடைக்கு உதாரணங்கள் காட்டுவோம்.

ஆறுமுக நாவலர் சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு, அவ்விறைப் பணியில் வழுவாது நிற்கும் திண்ணனார், பகற்காலத்தில் மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக் காலத்தில் நித்திரை செய்யாமல் சுவாமிக்கருகே நின்றும் இப்படித் தொண்டு செய்து வந்தார்.

வீராசாமிச் செட்டியார்

பூர்வம் சோழ ராஜாவின் மேல் கவி பாடிப் பரிசு பெறும் புலவர்களை ஒரு விறகுத் தலையன் பெண்சாதி இவர்கள் ஒரு வேலையும் செய்து கஷ்டப்படாமல் சுகமாக ஜீவனம் செய்துவர நம்முடைய புருஷன் மாத்திரம் காட்டுக்குப் போய் காலில் சுடுமுள் தைக்க நாள் தோறும் மாடு போல உழைத்து விறகு விற்று அரை வயிற்றுக் கஞ்சிக்கும் இல்லாமல் அவதிப்பட வேண்டியது என்ன! என்று நினைத்தாள்.