பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உரைநடை வளர்ச்சி


தாகத் தெரிகிறது. கடைசியாக ஒருவாறு தீர்மானஞ் செய்திருக்கிற பெண்ணின் தகப்பனார் பணத்தையும், விதியையும், ஜோதிடத்தையும் நம்பி வேலை செய்கிறார். தெய்வத்தை நம்புவதாகத் தெரியவில்லை. ஒட்டகத்துக்கு ஓரிடத்திலா கோணல் தமிழ்நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?

(தராசு-வசனங்கள் 744)

ஆண் பெண் சமத்துவம்-பிரச்சாரம்

குஷியாவில் கொடுங்கோல் சிதறிப்போய்விட்டதாம்.

ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்.

உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும், அநியாயம் சொல்லுக்கங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை.

பறையனுக்குப் பார்ப்பானும் கறுப்பு மனுஷனுக்கு வெள்ளை மனுஷனும் நியாயம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்.

பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்லுகிறேன்.

எவனும் தனது சொந்த ஸ்திரீயை அலகசியம்பண்ணு கிறான். தெருவில் வண்டி தள்ளி நாலனா கொண்டு வருவது மேல் தொழில் என்றும், அந்த நாலனாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண்மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண் சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்!

இந்தத் தொழில்கள் உயர்வென்றும் சோற்றுக்கும் துணி தோய்த்துக் கோயில் செய்து கும்பிட்டு வீடு புெருக்கிக் குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் இழிவென்றும் ஆண் மக்கள் நின்னக்கிறார்கள்.

வியபிசாரிக்குத் தண்டனை இகலோக நரகம்.

ஆண்மகன் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம். ................

பூமண்டலத்தில் துக்கம் ஆரம்பமாகிறது.

ஆணும் பெண்ணும் ஸ்மானம். பெண் சக்தி ஆண்...? பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும். பெண்ணை