பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உரைநடை வளர்ச்சி


எதுகை மோனைகள், அடுக்குச் சொற்கள், எதையும் உவமைகளோடு எழுதுவது, பொருளைத் தெளிவாகச் சொல்லாமல் அடைமொழிகளோடும் உவமைக் கதைகளோடும் சொல்லுவது, குழப்பமான கருத்துக்களை மிக நீண்ட வாக்கிய அமைப்புக்களால் தெளிவாக்குவது போல எழுதுவது, உயர்வு நவிற்சி, கூடியவரை எழுத்தறிவில்லாத மக்களுக்கு விளங்கும் படிக் கதை, உவமை முதலிய உத்திகளைப் பயன்படுத்தி எழுதுவது ஆகிய தன்மைகள் தி.மு.க. தலைவர்களின் தமிழ் நடையின் சிறப்பான அம்சங்கள்.

துடிப்புள்ள இளைஞர், மாணவரிடையே இந்த நடை பெரிதும் வரவேற்பினைப் பெற்றது. உள்ளடக்கத்தைவிட உருவத்திற்கு அதிக மதிப்புக் கொடுக்கும் பருவத்தினரான மாணவர்களும் இளைஞர்களும் இந்நடையால் கவரப்பட்டனர். மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடக் கூடிய செய்தியை மேற்கூறிய உத்திகளைக் கையாண்டு அழகுடனும் ஓசை நயத் துடனும் அண்ணாதுரை எழுதினார்.

ரஷியா என்றொரு நாடு இருக்கிறதாம்...அங்கு... என்று ஏழை பேசத் தொடங்கினாலோ... அங்கு தேனும் பாலும் ஆறாக ஒடுகிறது. வாரிவாரி பருகலாம். பாடு படாமல் பிழைக்கலாம் ..."பைத்தியக்காரா! பைத்தியக் காரா! பொய்யுரை கேட்டுப் பூரித்துப் போகிறாயே! அது ஒர் பரவ பூமி! பழிபாவத்திற்கு அஞ்சாத நெஞ்சினர் அவர்கள். அங்கு கலையும் காவியமும் காண முடியாது. ஞானமும் மோனமும் கிடையாது. தேர் திருவிழா இல்லை. தேவனருள் கிடையாது. மகிழ்ச்சி இல்லை. எழுச்சி இல்லை. செக்கு மாடுபோல் மக்கள் கிடந்து உழல் கின்றனர். இங்கு நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய். பொறுமையாய்ப் பதில் அளிக்கிறோம். அஞ்ஞானத்தால் உளறுகிறாய். மெய்ஞ்ஞானம் போதிக்கிறோம். அங்கு இது போல் முடியுமா? ஏன் என்று கேட்டு வாய் மூடுமுன் விணமாவாய்' என்று கூறி மிரட்டுவார் ஆட்சியாளர் களும் ஆலை அதிபர்களும்.

இந்த எடுத்துக்காட்டு அண்ணாதுரையின் எழுத்தாகும். இதில் முதலில் கூறிய அத்தனை தன்மைகளுடன் வேறு புதிய யுத்தியையும் பார்க்கலாம். தாம் சொல்ல வந்த கருத்தினை மட்டும் கூறிடாது எதிர்க் கருத்துக்களையும் எடுத்துக் கூறி அதே நேரத்தில் அதன்ன எள்ளி நகையாடும் முறையில் கூறி, தங்களுடைய கருத்தினை வலியுறுத்தும் பாணி இது. உரை