பக்கம்:உலகத்தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உலகத் தமிழ்

“சிந்தனைகளை உணர்த்தவும், அறிவியல் வளமிக்க விண்வெளிப் பயணக் காலத்தின் புதுச் செய்திகளைத் தெரிவிக்கவும் ஏற்ற கருவியாக, தமிழ் மாற வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும். தொழில் நுணுக்கம், அறிவியல், மருத்துவம் முதலியவற்றைக் கற்பிப்பதற்கு ஏற்ற பயிற்று மொழியாக இது வந்தாக வேண்டும்' என்பதை வற்புறுத்தினார். மேலும் கூறுகையில்:

“தமிழ் வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சி செய்துவிட்டு, அதோடு தம் பணி முடிந்ததென்று எண்ணிவிடக் கூடாது.

“இம் மாநாடு, மூன்று பணிகள்மீது கவனம் செலுத்த வேண்டும்.

“முதலாவதாக, தமிழ் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கு மிடையே மாணவர்கள் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

“இரண்டாவதாக, தமிழை ஒரு நவீன மொழி யாக்கும் வண்ணம், ‘ஆங்கில-தமிழ் அகராதி’யைத் தயாரிக்கும் பணியில் இறங்க வேண்டும்.

“மூன்றாவதாக, உலகின் பல வேறு நாடுகளிலும் தமிழைப் பரப்பவும் வளர்க்கவும் வேண்டும். இப்படி மூன்று திட்டங்களைத் தந்தார். இவற்றிற்குத் தமிழ் நாட்டு அரசு இயன்ற எல்லா உதவிகளையும் செய்யும்” என்று உறுதி கூறி உவகையில் ஆழ்த்தினார்.

இக் காலம் விரைவுக் காலம் எதிலும் படபடப்பு. மின்னலைப் போன்று விரையவே அவா. எனவே, அமைதியாக, ஆழ்ந்து நுணுகிப்பார்த்து உண்மையின் முழுமையைக் காண நேரமில்லை. நுண்மாண் நுழைபுலமுமில்லை. அத்தகையோர் ஆராய்ச்சியின் விளைவு குருடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/73&oldid=481163" இலிருந்து மீள்விக்கப்பட்டது