12 உலகப் பெரியார் காந்தி வாழ்க்கை லட்சியத்தை நோக்கி முன்னேறாமல் கீழ் நோக்கிச் செல்வது சுலபமான காரியம்.
மோசமான நிலைமை ஏற்படப்போகிறது என் றிருந்தால், அப்போது ஒரு நல்ல காரியத்தைச் செய் வதன் மூலம் அந்நிலைமை ஏற்படாதபடி தடுக்க முடியும். இது நாம் அனுபவபூர்வமாகக் காணும் உண்மை. உலக மக்களின் செய்கைகள் நாசகாரச் செய்கை களாக இருந்திருந்தால் உலகம் முன்னமே அழிந்திருக் கும் என்பதை நாம் உணர முடியாதா ? அன்பு, அல்லது வேறுவிதம் சொல்லவேண்டுமானால், அஹிம்சையால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.
உலகுக்கு நல்லவனாக இருக்க நான் கடவுளுக்குத் துரோகம் செய்யமாட்டேன். நான் சாகவேண்டுமென்று நூற்றுக்கணக்கான வர்கள் விரும்பினாலும் சத்தியம் நிலைக்கட்டும். எனது நம்பிக்கையின் முதல் படி அஹிம்சை: கடைசிப் படியும் அஹிம்சையே.
நான் நம்பிக்கையை எப்பொழுதும் இழக்கவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்திலும் நம்பிக்கை என துள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் என்றும் எனது நம்பிக்கையைக் கொல்லமுடியாது.