உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 உலகப் பெரியார் காந்தி மாணவர்கள் வகுப்பு உணர்ச்சிக்கோ அல்லது தீண்டாமை உணர்ச்சிக்கோ மனதில் இடந்தரலாகாது. தேசீயக்கொடியின் தத்துவத்தை அவர்கள் உணர வேண்டும். மாணவர்கள் தோட்டி வேலை செய்யவும் தயாராக இருக்கவேண்டும். மாணவர்கள் தங்களுடைய உயிர் போவதாக இருந்தாலும், அஹிம்சையைக் கைவிடலாகாது. அவர் கள் ரகசியமாக எதுவும் செய்யக்கூடாது. அவர்கள் எப்பொழுதும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். காந்திஜி அனுஷ்டித்த உண்ணாவிரதங்கள் மகாத்மா காந்தி டல தடவைகளில் தமது ஆத்மா பரிசுத்தத்துக்காகவும் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக வும் உண்ணாவிரதம் எடுத்திருக்கிறார். அந்த உண்ணா விரதங்களில் முக்கியமானவைகள் பின்வருமாறு: 1924 செப். 18-கோஹத்தில் ஹிந்து-முஸ்லிம் கலவரத்தை நிறுத்த டில்லியில் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். 1932 செப்.20-மாக்டொனால்டு வகுப்புத் தீர்ப் பை எதிர்த்து எர்ரவாடா சிறையில் சாகும்வரை உண்ணா விரதம் தொடங்கினார். செப்டம்பர் 26-ந் தேதி சர்க்கார் அனுப்பிய அறிக்கை கண்டு திருப்தியடைந்து உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.