6 உலகப் பெரியார் காந்தி 1919, ஏப். 13. அமிருதசரஸில் ஜாலியன்வாலாபாக் கோரவதை. 10 1919, ஏப். 14. ஜனங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்ட தால் மூன்று நாள் உண்ணாவிரதம். 1919, ஏப்.18. சத்யாக்கிரஹ நிறுத்தம். 1919, செ. 'நவஜீவன்' ஆசிரியரானார்; அக்டோபரில் 'யங் இந்தியா' ஆசிரியரானார். 1920, கிலாபத் விஷயமாக வைசிராயிடம் தூது. 1920, ஆக. 1, கேஸரிஹீந்த் மெடல், ஜூலு யுத்த மெடல், போயர் யுத்த மெடல் ஆகியவைகளைத் துறந்தார். 1920, டிச.அஹிம்சா முறையில் சுயராஜ்யம் பெறுவ தென்று நாகபுரி காங்கிரஸில் ஒரு தீர்மானம் நிறைவேறியது. 1921, ஜூலை, அந்நியத்துணி பகிஷ்காரம். 1921, டிச. காங்கிரஸ் காந்திஜிக்கு அளித்தது. காந்திஜிக்கு சர்வாதிகாரம் 1922, பிப்.1.பரீத்தோலியில் சத்தியாக்கிரகம் ஆரம் பிக்கப்போவதாக வைசிராய்க்கு நோட்டீஸ். 1922,பிப்.6.சௌரி சௌராவில் ஜனங்கள்கொள்ளி, சூறையில் ஈடுபட்டதால் 5-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சத்தியாக்கிரஹ நோக்கத்தைக் கைவிட்டார்.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/7
Appearance