பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 நாய்க்கடிக்கு நாயின் ரோமம் மருந்தாகும். -ஹங்கேரி வெந்நீரும், எனிமா”வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குண்மாக்கலாம். (குடலில் நீரேற்றும் குழாய் எனிமா.") -இத்தாலி -ரவி:யா தலையில் வலி யெடுத்தால், முட்டில் தைலம் தடவு. -ஸ்பெயின் பூண்டு ஏழு பிணிகளைத் தீர்க்கும். உணவோடு சேர்த்து மருந்தைக் கொடுத்தால், நோய் குணமாகாவிட்டாலும், பசியாவது:ஆறும். -ஆப்பிரிக்கா மர ண ம் மரணத்தின் காரணம் பிறப்பு. --பெளத்தம் மனிதன் பிறந்தவுடன் மரிக்கத் தொடங்குகிருன். -இங்கிலாந்து இறந்தவனுக்குக் குளிரில்லை. -இங்கிலாந்து திடீர் மரணம் திடீர் இன்பம் -இங்கிலாந்து வைத்தியருக்கும் மரணம் உண்டு. -இங்கிலாந்து மரணத்திற்கு அஞ்சுபவன் வாழ்பவளுகான். -இங்கிலாந்து பிறப்பது போலவே, இறப்பதும் இயற்கை -இங்கிலாந்து முற்றும் கனிந்த கனி முதலில் விழும். -இங்கிலாந்து பிறக்கும் பொழுதுதான் நாம் அழுகிருேம்; மரிக்கும் பொழுதன்று. -இங்கிலாந்து எல்லா மனிதரும் சிரஞ்சீவிகளா யிருக்கவே விரும்புகின்றனர். -இங்கிலாந்து வாழ்வில் (நன்கு) வாழாதவன் மரணத்திற்குப் பின்னும் வாழ -மாட்டான். இங்கிலாந்து மறு வாழ்க்கையை அலட்சியம் செய்பவன் இந்த வாழ்க்கைக் குத் தீங்கிழைக்கிருன் -யங்