பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 உலோபிக்கு இரட்டைச் செலவு. -தமிழ்நாடு உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழி வெட்டுவது போன்றது. -துருக்கி செல்வம் மிகுந்த உலோபியும், கொழுத்து வளர்ந்த ஆடும் இறந்த பிறகே நல்லவை. -gl, Stř உ த வி தினந்தோறும் எனக்கு வேண்டிய உணவைத் தேடிக்கொள்ள வாய்ப்பளித்தவனே என் தந்தையும் சகோதரனுமாவான். -வேல்ஸ் படிக்கட்டைக் கடப்பதற்கு நொண்டி நாய்க்கு உதவி செய். -இங்கிலாந்து காலம் தாழ்த்துச் செய்யும் உதவி உதவியன்று. -இங்கிலாந்து வண்டிக்கு மை போடுவோன் தன் எருதுக்கு உதவி செய்கிருன், -இத்தாலி ஒவ்வொருவருக்கும் உதவி செய்பவன் எவருக்கும் உதவி செய்தவகைான். -ஸ்பெயின் நீ உன் நண்பனுக்குப் பணத்தால் உதவி செய்ய முடியா விட்டால், ஒரு நெட்டுயிர்ப்பாலாவது (அனுதாபம் காட்டி) உதவி செய். -யூதர் பிறர்க்கு உதவி செய்தலே உண்மையான சமயம். -இந்தியா ஒரு கை மறு கையைக் கழுவுகின்றது; இரு கைகளும் முகத் தைக் கழுவுகின்றன. -குர்திஸ்தான் நான் (கனிகள்) உண்பதற்காக மற்றவர்கள் மரங்களை நட்டார்கள்; மற்றவர் உண்பதற்காக நானும் நடுகிறேன். -பாரசீகம் நீ அனுபவித்தல் அறிவு, பிறரையும் அனுபவிக்கச் செய்தல் நற்பண்பு. -பராசீகம் காகத்தை வளர்த்தால், அது உன் கண்களைக் கொத்தும். -ஃபாரன்ஸ் ஒரு மனிதனுக்கு உதவி செய்பவன் ஒரு தேவன். -இங்கிலாந்து